உள்ளடக்கத்துக்குச் செல்

றெம்பளர் கால்வாய்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிங் யீ பாலம் றெம்பிளர் கால்வாயின் மேல்
2004களில் டிங் காவ் பாலம் றெம்பிளர் காலவாயின் மேல்

றெம்பிளர் கால்வாய் (Rambler Channel) ஹொங்கொங்கில் உள்ள ஒரு கால்வாயாகும். இந்த கால்வாய் கவுலூன் தீபகற்பம் நிலப்பரப்பிற்கும் சிங் யீ தீவுக்கும் இடையில் அமைந்திருக்கிறது. அதாவது சிங் யி திவிலுருந்து புதிய கட்டுப்பாட்டகம் ஆட்சிப்பரப்பில் சுன் வான், குவாய் சுங் நகரத்திற்கும் இடையில் அமைந்துள்ளது. இந்த கால்வாயின் கடல் பரப்பின் அகலம் 900 மீட்டர்களாகும்.

வரலாற்று ரீதியாக இந்த கால்வாயை "சிங் யீ மூன்" என்றும் "சிங் யீ கால்வாய்" என்றும் முன்னாள் அழைக்கப்பட்ட கால்வாயாகும். இந்த கால்வாயின் கரையோரப்பகுதிகள் சுன் வான் புதிய நகரம் மற்றும் குவாய் சுங் கொள்கலன் துறை போன்றவைகளின் உருவாக்கத்தினால் கடந்த பல பத்தாண்டுகளாக பல மாற்றங்களைக் கண்டுள்ளன. மேற்கொள்ளப்பட்ட புனர்நிர்மானப் பணிகளால் கடல் பரப்பு ஒடுங்கியும், கரையோரப் பகுதிகள் அகன்றும் உள்ளன. சிங் யீ குடா என அழைக்கப்பட்ட குடா முற்றிலும் இந்த புனர்நிர்மானப் பணிகளால் மறைந்துவிட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

போக்குவரத்து பாதைக்கோடுகள்

[தொகு]

இந்த கால்வாய் ஊடாக ஆறு வாகனப் பாலங்களும் ஒரு தொடருந்து பாலமும் உள்ளன. அவைகளாவன:

படகு சேவைகள்

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Rambler Channel
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=றெம்பளர்_கால்வாய்&oldid=1359024" இலிருந்து மீள்விக்கப்பட்டது