றியல்விஎன்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
றியல்விஎன்சி
RealVNC connection.jpg
றியல்விஎன்சி வியூவர் பணியில்
உருவாக்குனர் றியல்விஎன்சி
பிந்தைய பதிப்பு 4.1.2 (இலவசம்) / 4.4.1 (பிரத்தேயேக) / 4.4.1 (எண்டபிறைஸ்) / மே 28, 2008
இயக்குதளம் மைக்ரோசாப்ட் விண்டோஸ் மைக் ஓஸ் எக்ஸ், லினக்ஸ், HP-UX, Solaris (Enterprise only)
வகை Remote administration
அனுமதி குனூ பொது அனுமதி / வணிகரீதியானது
இணையத்தளம் றியல்வின்சி

றியல்விஎன்சி (தமிழக வழக்கு:ரியல் விஎன்சி) மெய்நிகர் வலையமைப்பூடான கணினி ஓர் கணினியில் இருந்து பிறிதோர் கணினியைத் தானியக்க முறையூடாகக் கையாளும் மென்பொருள் ஆகும். ஆரம்பத்தில் அமெரிக்க பெல் ஆய்வுகூடத்தூடாக உருவாக்கப்பட்ட அதே நிரலாக்கர்களூடான றியல்விஎன்சி நிறுவனத்தில் ஊடாக உருவாக்கப்பட்டதாகும். றியல்விஎன்சி விண்டோஸ் மற்றும் ஆப்பிள் மாக் ஓஸ் எக்ஸ் (எண்டபிறைஸ் பதிப்பு மாத்திரம்) மற்றும் யுனிக்ஸ் மாதிரியான இயங்குதளத்தில் (இலவச மற்றும் எண்டபிறைஸ்) றியல்விஎன்சி கிளையண்ட் ஜாவா இல் இயங்கக்கூடியது.

றியல்விஎன்சி மூன்று பதிப்புக்களாகக் கிடைக்கின்றது.

  1. பிரத்தியேகப் பதிப்பு: விண்டோஸ் இயங்குதளத்தில் மாத்திரம் இயங்கும் வணிகரீதியான பதிப்பு
  2. எண்டபிறைஸ் பதிப்பு: வணிகரீதியான பதிப்பு எண்டபிறைஸ் பதிப்பு
  3. இலவசப் பதிப்பில் இதன் மூலநிரலைப் பெற்றுக் கம்பைல் பண்ணுதல் வேண்டும்.

இதன் பிந்தைய பதிப்பான 4.4 ஆனது அரட்டை மற்றும் புறொக்சி சேவர்களை ஆதரிக்கின்றது.

விசைப்பலகைக் குறுக்குவழிகள்[தொகு]

பயனர்கள் F8 ஐ அழுத்துவதன் மூலம் விருப்பத் தேர்வுகளைப் பெறலாம். இதில் முழுத்திரைக்கான தேர்வுகளும் உண்டு, றியல்விஎன்சி போட் 5900 ஐ பொதுவாக உபயோகிக்கின்றது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=றியல்விஎன்சி&oldid=2223311" இருந்து மீள்விக்கப்பட்டது