ரௌசா செரீப்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ரௌஸா ஷெரீப் நுழைவாயில்.

ரௌசா செரீப் (Rauza Sharif) அல்லது ஷேக் என்கிற அகமது சிர்ஹிந்தி தர்கா (Ahmad Sirhindi) எனப்படும் வழிபாட்டுத்தலம், வடமேற்கு இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்திலுள்ள குருத்வாராவில் பதேஹ்கர் சாஹிப் (Fatehgarh Sahib) என்னுமிடத்தில் சிர்ஹிந்த்-பஸ்ஸி பத்தானா சாலையில் அமைந்துள்ளது.[1]

நினைவிடம்[தொகு]

சுன்னி இசுலாம் இனத்தார் மத்தியில் இரண்டாவது மக்காவாக வணங்கப்படும் இது, இமாம் ரப்பானி செய்க் அஹ்மத் அல்-பாரூக்கி அல்-சிர்ஹிந்தி (இவர் இந்தியாவின் ஒரு இசுலாமிய அறிஞர்,ஹனபி நீதிபதி, இறையியலாளர்,இந்திய மெய்யியலாளர்,நக்ஷபந்தி சூபிப் பிரவின் முக்கிய உறுப்பினர். இவர் முஜத்தித் அலிப் ஸானி, கருத்து: "இரண்டாமாயிரம் வருடத்தை உயர்பெறச் செய்தவர்". அவர் இசுலாத்தை புத்துயிர் பெறச்செய்ததற்கும், முகலாயப் பேரரசர் அக்பரின் காலத்தின் தோண்றிய இஸ்லாத்துக்கு எதிரான கொள்கைகளை எதிர்த்தற்கும் முஜத்தித் அலிப் ஸானி என்று அழைக்கப்படுகின்றார்.[2] ) என்பவருக்கு அர்ப்பணிக்கப்பட்டதாக அறிய முடிந்தது. அஹ்மத் சிர்ஹிந்தி இப்பகுதியில் 1563-ம் ஆண்டு முதல், 1624-ம் ஆண்டு வரையில் வாழ்ந்துள்ளார்.[3][4]

உருஸ் கொண்டாட்டம்[தொகு]

அஹ்மத் சிர்ஹிந்தி (டிசம்பர் 10) நினைவு தினத்தில் அனுஷ்டிக்கப்படும் உருசு திருவிழாவின்போது இங்கு ஏராளமான இசுலாமிய பக்தர்கள் குழுமுகின்றனர். மேலும், இவ்வுருஸ் கொண்டாட்டம் (இறந்தநாள் நினைவுதினம்) 300-க்கும் மேற்பட்ட ஆண்டுகளாக இங்கு நடைபெறுவதாகவும், பெருமளவிற்கு இந்தியாவில் இருந்து இசுலாமியர்கள் கலந்து கொள்வதோடு, பாக்கித்தான், ஆப்கானித்தான், இந்தோனேசியா, வங்காளம் மற்றும் பிற இசுலாமிய நாடுகளிலிருந்தும் இக்கொண்டாட்டத்தில் கலந்து கொள்கிறார்கள்.[5]

கல்லறைகள்[தொகு]

இந்த தலத்தில் சேக் அவர்களது குடும்ப உறுப்பினர்களின் கல்லறைகளும், அது மட்டுமல்லாமல் ஆப்கானிய மன்னரான சமன் ஷா துரானி மற்றும் அவரது ராணியின் சமாதிகளும் இந்த தலத்தில் அமைந்திருக்கின்றன.[6]

கட்டமைப்புகள்[தொகு]

அதிசயத்தக்க தோரணவாயில் கட்டமைப்புகள் மற்றும் உருண்டு திரண்ட வடிவ குமிழ் மாடக்கோபுரங்களை கொண்டுள்ள இந்த வளாகத்தை, ஒரு வரலாற்று சின்னமாக இந்திய அரசாங்கம் அறிவித்துள்ளது. உஸ்தாத், ஷாஹிர்த் மற்றும் மீருல் மீரான் ஆகியோரது கல்லறை அமைப்புகளும் இந்த ரௌஸா ஷெரீப் வளாகத்துக்கு அருகிலேயே அமைந்துள்ளன.[7]

சான்றாதாரங்கள்[தொகு]

புற இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ரௌசா_செரீப்&oldid=3793756" இருந்து மீள்விக்கப்பட்டது