உள்ளடக்கத்துக்குச் செல்

ரோல்டைட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ரோல்டைட்டு
Roaldite
பொதுவானாவை
வகைகனிமம்
வேதி வாய்பாடு(Fe,Ni)4N
இனங்காணல்
படிக இயல்புகமாசைட்டில் நுண்தகடுகள்
படிக அமைப்புகனசதுரம்
மோவின் அளவுகோல் வலிமை5.5-6.5
ஒளிஊடுருவும் தன்மைஒளிபுகாது
ஒப்படர்த்தி7.21
ஒளியியல் பண்புகள்சமவியல்பு
மேற்கோள்கள்[1][2]

ரோல்டைட்டு (Roaldite) என்பது ((Fe,Ni)4N) என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஓர் உலோகக் கனிமம் ஆகும். விண்வீழ்கல்லாகக் கருதப்படும் இவ்வகைக்க் கனிமத்தில் இரும்பு, நிக்கல், நைட்ரசன் போன்ற தனிமங்கள் கலந்து காணப்படுகின்றன.

1981 ஆம் ஆண்டு மேற்கு ஆசுத்திரேலியாவில் கிடைத்த விண்வீழ்கல்லில் ரோல்டைட்டு முதன் முதலாகக் கண்டறியப்பட்டது. டென்மார்க் நாட்டைச் சேர்ந்த ரோல்டு நார்பேச்சு நீல்சன் (1928) என்ற மின்னணு நுண்ணாய்வி வல்லுநர் நினைவாக கனிமத்திற்கு ரோல்டைட்டு என்ற பெயர் சூட்டப்பட்டது. டென்மார்க் நாட்டில் காணப்பட்ட யெர்சுலெவ் விண்கல்லிலும், ஐக்கிய அமெரிக்காவின் அரிசோனா மாநிலத்தில் காணப்பட்ட விண்வீழ் பள்ளத்திலும் இக்கனிமம் காணப்படுவதாக கூறப்படுகிறது.

மேற்கோள்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரோல்டைட்டு&oldid=2918765" இலிருந்து மீள்விக்கப்பட்டது