உள்ளடக்கத்துக்குச் செல்

ரோதை முனி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ரோதை முனி என்பது இலங்கையில் மலையகத் தேயிலைத் தோட்டங்களில் வழிபடப்படும் சிறு தெய்வமாகும். தேயிலைத் தோட்டங்களில் பணியாற்றும் தமிழ்த் தொழிலாளர்களால் நீண்டகாலமாக இச்சிறுதெய்வம் வழிபடப்பட்டு வருகிறது.

பெயர்க் காரணம்[தொகு]

ரோதை என்பது சில்லு என்ற பொருளில் தமிழில் வழங்கும் ஒரு திசைச் சொல்லாகும். பிரித்தானியக் குடியேற்றக் காலத்தில் தேயிலைத் தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்பட்ட அரைக்கும் பொறிகளும் ஏனைய பொறிகளும் பாதுகாப்பற்றனவாக இருந்தன. இதனால் தொழிற்சாலைத் தொழிலாளர்கள் அடிக்கடி விபத்துக்குள்ளாகி வந்தனர். இவ்வாறான விபத்துக்களைத் தவிர்க்கும் முகமாக, தொழிற்சாலையில் தொழிலைத் தொடங்குவதற்கு முன்னர், பொறிகளின் சில்லுகளையும் வெட்டும் சுழற்பொறிகளையும் உருவகப்படுத்தும் ரோதை முனியை வழிபடும் வழக்கம் ஏற்பட்டது.

சடங்குகள்[தொகு]

விடுமுறைக்குப் பின்னர் தொழிற்சாலையைக் கழுவிச் சுத்தப்படுத்தி புதிதாகப் பணிகளைத் தொடங்குவதற்கு முன்னர் ரோதை முனிக்கு படையல் வைக்கும் வழக்கம் இருந்து வந்ததாக அறியப்படுகிறது.

இவற்றையும் பார்க்க[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ரோதை_முனி&oldid=2086517" இலிருந்து மீள்விக்கப்பட்டது