ரோசன்மண்ட் குறைத்தல் விளைவு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

ரோசன்மண்ட் குறைத்தல் விளைவு (Rosenmund reduction reaction) என்பது ஒரு வேதியியல் விளைவு ஆகும். அமில உப்பீனிகளை ஐதரசன் வாயு, பெலாடியம் கனிமம் மற்றும் பேரியம் சல்பேட் போன்றவைகளை பயன்படுத்தி ஆல்டிஹைட்டுகளாக மாற்றுவதே இந்த விளைவு ஆகும். இதில் பெலாடியத்தை பேரியம் சல்பேட் பயன்படுத்தி நஞ்சூட்டவேண்டும்.

The Rosenmund reduction

இதனைக் கண்டுபிடித்தவர் கார்ல் வில்ஹெல்ம் ரோசன்மண்ட் ஆவார். இதில் பெலாடியம் நஞ்சூட்டப்படவில்லையெனில் அமில உப்பீனிகள் பிரைமரி ஆல்க்கஹாலாக மாறிவிடும்.

CH3COCl + H2→(Pd-BaSO4) CH3CHO

இந்த விளைவு மூலம் ஆல்டிஹைடுகளில் ஒன்றான பார்மால்டிஹைட்டை(HCHO) உருவாக்க முடியாது.