ரோகன் ராதோட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ரோகன் ராத்தோட்
रोहन राठोड
மாநகராட்சி மன்ன உறுப்பினர் பெருநகரமும்பை மாநகராட்சி
பதவியில் உள்ளார்
பதவியில்
பிப்ரவரி 2017 முதல் தற்போது வரை
தொகுதிவார்டு எண். 68 (வெர்சோவா & அந்தேரி மேற்கு) பெருநகர மும்பை மாநகராட்சி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு21 ஆகத்து 1985 (1985-08-21) (அகவை 38)
மும்பை, மகாராஷ்டிரா
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி

ரோகன் ராத்தோட் மும்பை மாநகராட்சியின் நகராட்சி மன்ற உறுப்பினராக உள்ளார், அந்தேரி மேற்கு & வெர்சோவாவில் உள்ள வார்டு எண் 68 இல் இருந்து பெருநகரமும்பை மாநகராட்சிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் இத்தொகுதியில் 1900 வாக்குகள் வித்தியாசத்தில் பாரதிய ஜனதா கட்சி உறுப்பினராக & மும்பையில் உள்ள இளைய கூட்டுரிமைக்குழு உறுப்பினர்களில் ஒருவர் ஆவார்.

சதுப்புநிலங்களைப் பாதுகாத்தல் மற்றும் சட்டவிரோத ஆக்கிரமிப்புகள் மற்றும் நில அபகரிப்புக்கு எதிரான நடவடிக்கை ஆகியவற்றில் அவர் நன்கு அறியப்பட்டவர் ஆகிறார். [1] ஜுஹு வெர்சோவா இணைப்பு சாலையில் ஒரு பெரிய சந்திப்பை அலங்கரிக்கும் "போதி மரம்" சிற்பத்திற்கான கருத்துருவாக்கம் இவருடையதாகும். நகரத்தில் சுற்றுச்சூழல்-நட்புரீதியான கட்டுமானத்தைத் தேர்வுசெய்யும் கட்டுமான ஒப்பந்ததாரர்களுக்கு அபிவிருத்தி கட்டணங்கள் மீதான வரி சலுகைகளை வழங்குவதற்கான திட்டத்தை ரோகன் ராத்தோட் பெருநகர மும்பை மாநகராட்சியில் நிறைவேற்றியுள்ளார் [2] சுழிய அளவிற்கு கழிவுகளை நிர்வகிப்பதை ஊக்குவிப்பதற்காக அவர் மக்கும் கோப்பைகள், கரிம கழிவு மாற்றி போன்ற உபகரணங்களை வழங்க வேண்டும் என்ற திட்டத்தை வழங்கியுள்ளார். மாநகராட்சி மன்ற உறுப்பினர்களின் நிதியில் இருந்து சமூகத்திற்கு இத்தகைய உதவிகள் கிடைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தினார். சர்தார் வல்லப் பாய் படேல் (எஸ்விபி) நகரில் உள்ள மாவட்ட ஆட்சியரின் கட்டுப்பாட்டில் உள்ள நிலத்திலிருந்து 250 எண்ணிக்கையிலான சட்டவிரோதமாக உருவாகியிருந்த குடிசைகளை இடிப்பதன் மூலம் சட்டவிரோத குடிசைகள் மற்றும் ஆக்கிரமிப்புகளுக்கு எதிரான தனது நிலைப்பாட்டை அவர் காட்டியுள்ளார் [3] அவர் அந்தேரி மேற்கு & வெர்சோவாவில் உள்ள குடிமக்களுடன் விரிவாகவும் நெருக்கமாகவும் பணியாற்றுகிறார். [4] [5] [6]

தற்போது அவர் பாரதிய ஜனதா கட்சி இளைஞர் பிரிவு பிஜேஒய்எம்-மும்பையின் துணைத் தலைவராக பணியாற்றி வருகிறார்.

குறிப்புகள்[தொகு]

  1. "Mumbai: Juhu corporator takes surprise action against hawkers". mid-day. 15 February 2018.
  2. "Mumbai: BMC plans tax benefits for green buildings". 29 November 2017.
  3. "Mumbai: 250 hutments in SVP Nagar face BMC's axe". 28 October 2017.
  4. "BJP, Sena leaders protest irregular water supply". 24 October 2018. https://www.thehindu.com/news/cities/mumbai/bjp-sena-leaders-protest-irregular-water-supply/article25303811.ece. 
  5. http://www.bmcelections.com/ward-no-68-bmc-elections-2017/
  6. Lua error in Module:Citation/CS1/Utilities at line 206: Called with an undefined error condition: err_numeric_names.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரோகன்_ராதோட்&oldid=3075685" இலிருந்து மீள்விக்கப்பட்டது