உள்ளடக்கத்துக்குச் செல்

ரேஷ்மி ராவ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ரேபிட் ரேஷ்மி
பிறப்புரேஷ்மி ஆர். ராவ்
பெங்களூரு, இந்தியா
தேசியம்இந்தியர்
பணிஅறிவிப்பாளர், நிகழ்ச்சி தொகுப்பாளர், வானொலி தொகுப்பாளர்
செயற்பாட்டுக்
காலம்
2007ம் ஆண்டு முதல்
வாழ்க்கைத்
துணை
டேவிஸ்

ரேஷ்மி ஆர். ராவ், அல்லது ஆர் ஜே ரேபிட் ரேஷ்மி என்றும் அழைக்கப்படும் இவர் பெங்களூரைச் சேர்ந்த ஒரு இந்திய வானொலி பிரபலமும், பாடகியும், கன்னட நடிகையுமாவார். [1] [2] [3] [4] இவர் வானொலி அலைவரிசைகளிலும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் தொகுப்பாளராகப் பணியாற்றியுள்ளார். இவர் யதார்த்த தொலைக்காட்சி நிகழ்ச்சியான நடன நட்சத்திரம் என்பதில் போட்டியாளராக பங்கேற்றார். ஆனால் வெற்றிபெறவில்லை. டீல் ராஜா என்ற கன்னட படத்துக்காக ஒரு பாடலையும் பாடியுள்ளார். மேலும் மற்றுமொரு யதார்த்த பொழுதுபோக்கு நிகழ்ச்சியான பிக் பாஸ் கன்னடத்தில் (சீசன் 6) கலந்துகொண்டுள்ளார்.

தற்போது ரேஷ்மி, 92.7 பிக் எப் எம்மில் தொகுப்பாளராக பணியாற்றிவருகிறார். மேலும் தனியாக யூடியூப் காணொளிகளையும் பதிவேற்றி வருகிறார். [5]

விருதுகள்[தொகு]

  • IRF- இந்திய வானொலி மன்றத்தின் சிறந்த நிகழ்ச்சியான "ரெட்ரோ சவாரி" 2017க்கான வெள்ளி வென்றுள்ளார்/
  • IRF- இந்திய வானொலி மன்றத்தின் சிறந்த நிகழ்ச்சியான "ரெட்ரோ சவாரி" 2016க்கான வெள்ளி வென்றுள்ளார்.
  • ஆர்யபட்டா விருது - 2016 ஆம் ஆண்டின் வானொலி தொகுப்பாளர்.
  • ஊடக விருதுகள் - 2016 ஆம் ஆண்டின் சிறந்த வானொலி தொகுப்பாளர்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "RJ Rapid Rashmi to make filmi debut with Ganesh's brother". 5 May 2014. https://timesofindia.indiatimes.com/entertainment/kannada/movies/news/RJ-Rapid-Rashmi-to-make-filmi-debut-with-Ganeshs-brother/articleshow/34683672.cms. 
  2. "RJ Rashmi Ramakrishna aka 'Rapid Rashmi' makes Sandalwood debut | Latest News & Updates at Daily News & Analysis". 2015-09-08. http://www.dnaindia.com/entertainment/report-rj-rashmi-ramakrishna-aka-rapid-rashmi-makes-sandalwood-debut-2122989. 
  3. "People don't know me in entire Karnataka: RJ Rapid Rashmi - Times of India". https://timesofindia.indiatimes.com/tv/news/kannada/People-dont-know-me-in-entire-Karnataka-RJ-Rapid-Rashmi/articleshow/46688217.cms. 
  4. "Rashmi: From Radio Jockey to the Big screen". 2014-05-09. https://www.deccanchronicle.com/140508/entertainment-sandalwood/article/rashmi-radio-jockey-big-screen. 
  5. "BIG FM 92.7 - Dhun Badal ke toh Dekho". Bigfm.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரேஷ்மி_ராவ்&oldid=3674103" இலிருந்து மீள்விக்கப்பட்டது