ரேஷ்மா பாம்பேவாலா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ரேஷ்மா பாம்பேவாலா
பிறப்புஇந்தியா
தொழில்விளம்பர நடிகை
முடியின் நிறம்பழுப்பு
கண் நிறம்கருப்பு
வாழ்க்கை துணைடிமிட்ரி லெஜின்ஸ்கா

ரேஷ்மா பாம்பேவாலா, இந்தியாவின் மும்பையைச் சேர்ந்த பிரபல விளம்பர நடிகையும், நகை மற்றும் ஆடைகள் வடிவமைப்பாளரும், நடிகையாவார்.[1] ஃபெமினா மிஸ் இந்தியாவில் மிஸ் அழகான புன்னகை என்ற பட்டத்தை வென்றுள்ளார். மேலும் 1995 ஆம் ஆண்டில் கிளாட்ராக்ஸ் அழகிப்போட்டியில் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளார். அவர் பிரபல மதுக்கலவை நிபுணரான,டிமிட்ரி லெஜின்ஸ்காவை மணந்துள்ளார். இவர் டிஸ்கவரி தொலைக்காட்சியில் வெளியான காக்டெய்ல் ராஜாக்கள் என்ற நிகழ்ச்சியில் தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார்.[2][3]

விளம்பரத்துறை[தொகு]

ரேஷ்மாவை, பிரபல பாலிவுட் நடன இயக்குனர் சங்கீத் சோப்ரா முதன்முதலாக விளம்பரத்துறைக்கு அறிமுகப்படுத்தினார். ரேஷ்மா வெண்டெல் ரோட்ரிக்ஸ், ஹேமந்த் திரிவேதி, ஷஹாப் துராசி மற்றும் அசீம் கான் போன்றோருக்கு மாதிரியாக இருந்து வடிவமைத்துள்ளார், அத்தோடு குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் இந்தி திரைப்படங்கள் மற்றும் இண்டிபாப் தனி இசைத்தொகுப்புகள் போன்றவைகளில் பணியாற்றியுள்ளார்.[4] ரேஷ்மா,மும்பை கல்லூரியில் இளங்கலை பட்டதாரி படிப்பில் விளம்பரப்பிரிவை படித்துள்ளார்.[5]

திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி[தொகு]

  • "கோய் செஹரி பாபு தில் லஹேரி பாபு ரீமிக்ஸ்" - ஆஷா போஸ்லேயின் சுயசரிதை UMI10 Vol 2
  • "மர்ஹபா மர்ஹபா" - கர்வ்: பெருமை மற்றும் மரியாதை - 2004
  • "தும் பின்" படத்தின் "தோடா தரு விச் பியார் மிலா தே" பாடல்
  • "சவுன் டி ஜாடி" பாப்பு மான்

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ரேஷ்மா_பாம்பேவாலா&oldid=3741899" இலிருந்து மீள்விக்கப்பட்டது