ரேவதி அத்வைதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ரேவதி அத்வைதி
Revathi Advaithi
பிறப்புஅக்டோபர் 18, 1967 (1967-10-18) (அகவை 56)
இந்தியா
கல்விபிர்லா தொழில்நுட்பம் மற்றும் அறிவியல் கழகம் இளம் அறிவியல்
முதுகலை வணிக மேலாண்மை)
பட்டம்பிளெக்சு நிறுவனத்தில் தலைமை நிர்வாக அதிகாரி
பதவிக்காலம்பிப்ரவரி 2019 – முதல்
முன்னிருந்தவர்மைக்மெக்னாமரா

ரேவதி அத்வைதி (Revathi Advaithi) இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவராவார். அமெரிக்காவில் வணிக நிர்வாகியாக உள்ளார். பிளெக்சு நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக பணிபுரிகிறார். முன்னதாக இந்நிறுவனம் பிளெக்சுட்ரானிக்சு என்று அழைக்கப்பட்டு வந்தது. அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம் துறைகளில் பெண்களுக்கான வழக்கறிஞராகவும் செயல்படுகிறார். [1] 2019 ஆம் ஆண்டு பிளெக்சில் சேருவதற்கு முன்பு அத்வைதி ஈடன் மற்றும் அனிவெல் நிறுவனத்தில் பல்வேறு தலைமைப் பதவிகளில் பணியாற்றினார்.

உபர் மற்றும் கேட்டலிசுட்டு.ஆர்க் நிறுவனங்களின் இயக்குநர்கள் குழுவிற்கு ஒரு தனித்துவமான இயக்குனராக பணியாற்றுகிறார். [2] மாசாச்சூசெட்சு தொழில்நுட்பக் கழகத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஆலோசனைக் குழுவில் உறுப்பினராகவும் உள்ளார். 2019 மற்றும் 2020 ஆம் ஆண்டுகளில் பார்ச்சூன் பத்திரிகை தேர்ந்தெடுத்த மிகவும் சக்திவாய்ந்த பெண்கள் பட்டியலில் இவர் பெயரும் இடம்பெற்றது.[3]

கல்வி[தொகு]

அத்வைதி 1990 இல் பிர்லா அறிவியல் மற்றும் தொழில் நுட்ப நிறுவனத்தில் இயந்திரப் பொறியியலில் இளநிலை பட்டம் பெற்றார். மேலும் 2005 ஆம் ஆன்டு தண்டர்பேர்டு குளோபல் பள்ளியில் வணிக மேலாண்மையில் முதுநிலை பட்டம் பெற்றார்.[4]

தொழில்[தொகு]

ஓக்லகோமாவின் சாவனியில் உள்ள ஈட்டன் நிறுவனத்தின் கடைத்தள மேற்பார்வையாளராக அத்வைதி தனது வாழ்க்கையைத் அத்வைதி வாழ்க்கையைத் தொடங்கினார். [5] 2002 ஆம் ஆண்டு அனிவெல் நிறுவனத்தில் சேர்ந்தார், அங்கு உற்பத்தி மற்றும் விநியோகச் சங்கிலிப் பிரிவில் ஆறு ஆண்டுகள் செயல்பட்டார். 2008 ஆம் ஆண்டில் அத்வைதி மீண்டும் ஈட்டனுக்குத் திரும்பினார். முதன்மை இயக்க அலுவலராக ஆவதற்கு முன்பு 10 ஆன்டுகளுக்கும் மேலாக மின் வணிகத்தின் பல்வேறு பகுதிகளை நடத்த உதவினார். [6]

2019 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் அத்வைதி பிளெக்சு நிறுவனத்தில் தலைமை நிர்வாக அதிகாரியாக பணியில் சேர்ந்தார். தொழில்நுட்பம், உற்பத்தி மற்றும் விநியோகச் சங்கிலியின் அடுத்த சகாப்தத்தை இயக்குவதில் தனது கவனம் இருப்பதாக அப்போது அவர் குறிப்பிட்டார்.[7]

இல்லினாய்சு பப்பளோ குரோவ் நிறுவனத்தில் ரேவதி அத்வைதி

அத்வைதியின் நிர்வாகத்தின் கீழ், பிளெக்சு நிறுவனம் அதன் ஒப்பந்த உற்பத்தித் தொழிலை அதிகப்படுத்தி, வாடிக்கையாளர் மதிப்புச் சங்கிலி உரிமையாளருடன் நேரடி தொடர்புக்கு அதன் கவனத்தை மாற்றியது. [8] தனது தலைமைத்துவ பாணியை "பச்சாதாபமாக இருந்தாலும் விரைவாக இவர் முடிவுகளை எடுப்பார். வாடிக்கையாளர்கள் மற்றும் ஊழியர்களுடனான சந்திப்புகளுக்கு தனது 60% நேரத்தை செலவிடுகிறார். [9]

2020 ஆம் ஆண்டு சனவரி மாதத்தில் பிளெக்சு நிறுவனத்தின் தொழிற்சாலைகள் 8,000 தனிநபர் பொருட்களின் பற்றாக்குறையை எதிர்கொண்டது. கோவிட் தொற்றுநோய் தனது வாழ்க்கையில் சந்தித்த மிகவும் கடினமான நேரம் என்று ஒரு பேட்டியில் இவர் கூறியுள்ளார். அத்வைதியின் வழிகாட்டுதலின் கீழ், பிளெக்சு நிறுவனம் தனது 50,000 சீனத் தொழிலாளர்களை பிப்ரவரி தொடக்கத்தில் பாதுகாப்பான வேலைக்குத் தயார்படுத்தியது, மே மாத தொடக்கத்தில், இந்நிறுவனம் நூற்றுக்கணக்கான தொலைதூர தொழிலாளர்களை வேலைக்குத் திருப்பி தொற்றுநோயை எதிர்த்துப் போராட மருத்துவ உற்பத்தியை துரிதப்படுத்தியது. [10]

போலந்தின் டெக்சியுவ் நிறுவனத்தில் ரேவதி அத்வைதி

அத்வைதியின் ஆட்சிக்காலத்தில், பிளெக்சு நிறுவனம் நீர் பாதுகாப்பைக் கையாண்டது. [11]

அத்வைதி பிரித்தானிய பன்னாட்டு திட்டங்கள் வாரியத்தில் சனவரி 2019 முதல் சூலை 2020 வரை பணியாற்றினார். [12] சூலை 2020 ஆம் ஆண்டில் இந்த பொறுப்பில் இருந்து விலகி உபரில் குழு உறுப்பினராக சேர்ந்தார். [13] வணிக வட்டமேசை [14] மற்றும் கேட்டலிசுட்டு நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரியாகவும் உறுப்பினராகவும் உள்ளார். [15]

ஊடகம் மற்றும் பேச்சு[தொகு]

2019 மற்றும் 2020 ஆம் ஆண்டுகளில், அத்வைதி பார்ச்சூனின் மிக சக்திவாய்ந்த பெண்கள் பட்டியலில் பெயரிடப்பட்டார். இவ்வாறு அங்கீகரிக்கப்பட்ட ஒரே இந்திய வம்சாவளி தலைமை நிர்வாக அதிகாரிகளில் ஒருவர். [16]

பிசினசு டுடே பத்திரிகை அத்வைதியை 2020 ஆம் ஆண்டில் இந்தியாவின் மிக சக்திவாய்ந்த பெண்களில் ஒருவராக அங்கீகரித்தது. [17]

2021 ஆம் ஆண்டில் கேட்கெட்சு நவ் அத்வைதியை மிக முக்கியமான இந்திய வம்சாவளி தொழில்நுட்ப நிர்வாகிகளில் ஒருவராக பட்டியலிட்டது. [18]

அத்வைதியின் கீழ் பிளெக்சு நிறுவனம் உலகின் மிகவும் போற்றப்பட்ட நிறுவனங்களில் ஒன்றாக மாறியதென பார்ச்சூன் பெயரிட்டது. [19]

அத்வைதி சிலிக்கான் பள்ளத்தாக்கு தலைமைக் குழுவின் ஆண்டு மன்றத்தில் பேசினார். [20] உலகப் பொருளாதார மேம்பட்ட உற்பத்தி பணிக்குழு [21] மற்றும் ஆர்ர்வார்டு வணிக கூட்டங்களில் 2020 ஆம் ஆன்டு சொற்பொழிவுகள் நிகழ்த்தினார். [22]

தனிப்பட்ட வாழ்க்கை[தொகு]

1967 ஆம் ஆண்டு இரசாயனப் பொறியாளரான ஏ.என்.என். சுவாமிக்கும் இல்லத்தரசியான விசாலம் சுவாமிக்கும் மகளாக இவர் பிறந்தார். அத்வைதி ஐந்து மகள்களில் ஒருவராவார். இறுதியாக இந்தியாவின் சென்னையில் குடியேறுவதற்கு முன்பு இவர்களுடைய குடும்பம் பீகார், குசராத்து, அசாமில் வாழ்ந்தது,

ரேவதி தனது கணவர் சீவன் முல்குந்தை கன்சாசின் அட்சின்சனில் சந்தித்து 1998 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். ஜீவன் மற்றும் ரேவதி இங்கிலாந்து, சாங்காய், பீனிக்சு, பிட்சுபர்க் ஆகிய இடங்களில் வசித்தனர். இப்போது பே பகுதியில் வசிக்கிறார்கள். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள். [4]

அத்வைதி பன்முகத்தன்மை மற்றும் தொழிலாளர் சேர்க்கையிலும் பெண்களுக்கான அறிவியல் தொழில்நுட்பம், பொறியியல் கணிதம் கல்வியில் ஆர்வமுள்ளவருமாவார். [23]

மேற்கோள்கள்[தொகு]

  1. Tellis, Shannon. "Revathi Advaithi, only Indian-origin CEO on Most Powerful Women in Biz list, is a BITS Pilani alum, advocates STEM education for girls". The Economic Times.
  2. Stych, Anne. "Working women's advocacy group Catalyst adds UPS CEO Carol Tome, five others to board". The Business Journals.
  3. "Most Powerful Women". Fortune.
  4. 4.0 4.1 "Eaton electrical unit chief 'giving space'". Pittsburgh Post-Gazette (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-06-23.
  5. Tellis, Shannon (2019-09-25). "Revathi Advaithi, only Indian-origin CEO on Most Powerful Women in Biz list, is a BITS Pilani alum, advocates STEM education for girls". The Economic Times. https://economictimes.indiatimes.com/magazines/panache/revathi-advaithi-the-only-indian-origin-ceo-on-most-powerful-women-in-biz-list-is-a-bits-pilani-alum-advocates-stem-education-for-girls/articleshow/71291129.cms. 
  6. Loizos, Connie (July 2, 2020). "Uber adds another director to its board Flex CEO Revathi Advaithi". https://techcrunch.com/2020/07/02/uber-adds-another-independent-director-to-its-board-flex-ceo-revathi-advaithi/. 
  7. Gale, Michael. "A Lesson For The Vaccine Industry From The Future of Flexible Manufacturing". Forbes (February 8, 2021). https://www.forbes.com/sites/michaelgale/2021/02/08/a-lesson-for-the-vaccine-industry-from-the-future-of-flexible-manufacturing/?sh=1fff9cb44466. 
  8. Moorhead, Patrick. "Meet Flex: One Of The Most Crucial Companies You May Not Be Familiar With". Forbes (June 22, 2020). https://www.forbes.com/sites/moorinsights/2020/06/22/meet-flex-one-of-the-most-crucial-companies-you-may-not-be-familiar-with/?sh=3cf0cb077ff9. 
  9. "How one company manages supply chains for every single 'essential' industry". Fortune (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-09-24.
  10. Lynch, David (July 30, 2020). "Business Unusual". The Washington Post.
  11. "The A List 2020". CDP.
  12. "Top 5 Indian origin tech executives in the world". Business Reader (in அமெரிக்க ஆங்கிலம்). 2021-02-03. பார்க்கப்பட்ட நாள் 2021-03-31.
  13. "Uber adds another director to its board: Flex CEO Revathi Advaithi". TechCrunch (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-09-24.
  14. "Business Roundtable".
  15. "Catalyst CEO Champions For Change".
  16. "Revathi Advaithi". Fortune (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-06-23.
  17. "BT MPW 2020 Business Today honors 'Most Powerful Women' who lead from the front". https://www.businesstoday.in/current/corporate/businesstoday-honours-most-powerful-women-in-business-and-economy-who-lead-from-front/story/417721.html. 
  18. "17 most-important Indian origin tech executives in the world". Gadgets Now. https://www.gadgetsnow.com/slideshows/17-most-important-indian-origin-tech-executives-in-the-world/photolist/80456178.cms. 
  19. "World's Most Admired Companies". Fortune.
  20. "Silicon Valley Leadership Group debuts 'Inclusive Conversations' series at the 2020 Annual Virtual Forum"". Silicon Valley Leadership Group.
  21. "Pioneers of Change Summit". World Economic Forum.
  22. "Leading Through a Crisis". Harvard Business School. Archived from the original on 2021-09-05. பார்க்கப்பட்ட நாள் 2021-09-05.
  23. "EMSNOW Executive Interview: Revathi Advaithi, CEO, Flex · EMSNow". EMSNow (in அமெரிக்க ஆங்கிலம்). 2020-03-11. பார்க்கப்பட்ட நாள் 2020-06-23.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரேவதி_அத்வைதி&oldid=3656654" இலிருந்து மீள்விக்கப்பட்டது