உள்ளடக்கத்துக்குச் செல்

ரேணு கண்ணா சோப்ரா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ரேணு கண்ணா சோப்ரா (Renu Khanna Chopra) என்பவர் இந்திய அறிவியலாளர் ஆவார். இவர் முதன்மை அறிவியலாளராகவும் இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில் தேசிய சகாவாக அழுத்த உடலியல் & புது தில்லி உயிர்வேதியியல் ஆய்வக நீர் தொழில்நுட்ப மையத்தில் பணிபுரிகிறார்.[1]

பிறப்பு[தொகு]

சோப்ரா செப்டம்பர் 24, 1949-இல் இந்தியாவின் தில்லி மாநகரில் பிறந்தார்.

கல்வியும் பணியும்[தொகு]

சோப்ரா தில்லியில் உள்ள சீமாட்டி இர்வின் பள்ளியிலும் குவாலியரில் உள்ள கமலா ராஜா பெண்கள் கல்லூரியிலும் படித்தார். இவர் இளம் அறிவியல், முது அறிவியல், முனைவர் பட்டங்களை இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகத்தின் நிறுவனத்திலிருந்து பெற்றார். இவர் தகைசால் அறிவியலாளராக நீர் தொழில்நுட்ப மையம், இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில் பணிபுரிந்தார். இவர் ஹோமி பாபா நிதியுதவி, இந்தியத் தேசிய அறிவியல் கழகம்-அரச கழக அறிவியலாளர் பரிமாற்ற நிதியுதவி, உயிர்தொழில்நுட்பவியல் வெளிநாடு நிதியுதவி, இந்திய வேளாண் கழக தேசிய அறிவியலாளர் நிதி உதவிகளைப் பெற்றுள்ளார்.[1]

விருதுகள்[தொகு]

தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் குழுவின் அறிவியல் நிதியுதவியினை 1965 முதல் 1974 வரையிலும், இந்தியத் தேசிய அறிவியல் அகாதமியின் இளம் அறிவியலாளர் விருதினை 1978ஆம் ஆண்டும், ஆர். டி ஆசனா அறக்கட்டளை விருதினை 1980–83-ஆம் ஆண்டும், ஆர். டி. ஆசன பரிசினை 1983ஆம் ஆண்டும், இந்திய வேளாண் ஆராய்ச்சி கழக சிறந்த பெண் அறிவியலாளர் விருதினை 1995ஆம் ஆண்டும் பிளாட்டினம் ஆண்டு விரிவுரை விருதினை 1998ஆம் ஆண்டும் பெற்றார். இவர் உயிர் அறிவியல் ஆய்விதழின் தொடர்பு தொகுப்பாசிரியராகவும், இந்தியத் தேசிய அறிவியல் கழக குழு உறுப்பினராக 2009 முதல் 2011 வரை செயல்பட்டார்.[1]

சக: இந்தியத் தேசிய அறிவியல் கழகம்; தேசிய அறிவியல் அகாதமி, இந்தியா.[1]

பங்களிப்பு[தொகு]

ரிசர்ச்கேட்தளத்தில் இவரது 72 ஆய்வுக் கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 "National Academy of Agricultural Sciences" (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2017-03-04.
  2. "Renu Khanna-Chopra - Publications" (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2017-03-04.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரேணு_கண்ணா_சோப்ரா&oldid=3883174" இலிருந்து மீள்விக்கப்பட்டது