ரேணாடு ஏழாயிரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ரேணாடு ஏழாயிரம் என்பது சாளுக்கிய இராச்சியத்திற்கும் பல்லவ இராச்சியத்திற்கும் இடையே அமைந்திருந்த சிறு இராச்சியமாகும். இப்போது இது ஆந்திர நாட்டிற்குள் உட்பட்ட 'கடப்பை', 'கர்நூல்' எனும் மாவட்டங்கைள கொண்டுள்ளது. பல்லவ மன்னன் நரசிம்ம வர்மன் காலத்தில் இந் நாட்டை சோழர் வம்சத்தைச் சேர்ந்த புண்ணிய குமாரன் என்பவன் ஆட்சி செய்திருந்தான்.

இவன் தன்னை கரிகாற்சோழன் வழிவந்தவன் என்றும், நான்கு தலைமுறையாக இவன் முன்னோர் இந்த ரேணாட்டை ஆண்டு வந்திருந்தனர் என்றும் மலெபாடு செப்புப் பட்டயத்தில் கூறிக் கொள்கின்றான்.

மேற்கோள்கள்[தொகு]

  • மயிலை சீனி. வேங்கடசாமி. (2005). நரசிம்மவர்மன். சென்னை: நாம் தமிழர் பதிப்பகம். ப:19.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரேணாடு_ஏழாயிரம்&oldid=2476514" இருந்து மீள்விக்கப்பட்டது