ரேகா தீட்சித்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ரேகா தீட்சித்
நீதிபதி-அலகாபாத் உயர் நீதிமன்றம்
பதவியில்
15 நவம்பர் 2016 – 9 ஆகத்து 2021
பரிந்துரைப்புடி. எசு. தாக்கூர்
நியமிப்புபிரணப் முகர்ஜி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு10 ஆகத்து 1959 (1959-08-10) (அகவை 64)
முன்னாள் கல்லூரிடாக்டர் பீம்ராவ் அம்பேத்கர் பல்கலைக்கழகம்

ரேகா தீட்சித் (Rekha Dikshit-பிறப்பு 10 ஆகத்து 1959) இந்தியாவின் உத்தரப்பிரதேசத்தில் உள்ள அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி ஆவார்.[1] இவர் ஷா பானு சீவனாம்ச வழக்கு உட்படப் பல குறிப்பிடத்தக்க வழக்குகளில் இவர் விசாரணை நீதிபதியாக இருந்துள்ளார். இந்தியாவில் முஸ்லீம் பெண்களுக்குப் பராமரிப்பு செலுத்துவது தொடர்பான சர்ச்சைக்குரிய வழக்கு, தாஜ் நடைபாதை வழக்கு மற்றும் உத்தரப் பிரதேச என்ஆர்ஹெச்எம் மோசடி வழக்கு உட்படப் பல வழக்குகளின் நீதிபதியாகச் செயல்பட்டுள்ளார்.[2][3][4]

வாழ்க்கை[தொகு]

ஆக்ரா பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்று 1981-இல் பட்டம் பெற்றார்.[1] ஆளுநரின் ஆலோசகராகவும், உத்தரப் பிரதேச சட்டமன்றத்தின் முதன்மை செயலாளராகவும் பணியாற்றிய வழக்கறிஞரான பிரதீப் துபேவை இவர் மணந்தார்.[4]

தொழில்[தொகு]

1984ஆம் ஆண்டில் முதன்மை அமர்வு நீதிபதியாக நியமிக்கப்பட்டார் தீட்சித், 2013ஆம் ஆண்டில் மாவட்ட மற்றும் அமர்வு நீதிபதியாகப் பதவி உயர்வு பெற்றார்.[1]

1988ஆம் ஆண்டில், தீட்சித் இலக்னோ நீதித்துறை நீதிபதியாக இருந்தார். முமுகமது. முகமது வழக்கில் விசாரணை நடத்தினார்.[4] இவர் ஷா பானு சீவனாம்ச வழக்கில் ஷா பானோ தனது கணவரிடமிருந்து பராமரிப்பு கொடுப்பனவுகளுக்கு உரிமை உண்டு என்று தீர்ப்பளித்தார்.[4] இத்தீர்ப்பை அலகாபாத் உயர் நீதிமன்றமும் உச்ச நீதிமன்றமும் உறுதி செய்தன. பின்னர் முஸ்லீம் பெண்கள் (விவாகரத்து உரிமைகள் பாதுகாப்பு சட்டம் 1986) இயற்றப்பட்டது.[5]

ரே கான்பூர் மற்றும் கான்பூரில் மாவட்ட நீதிபதியாகவும், தாஜ் காரிடார் வழக்கு மற்றும் உத்தரp பிரதேச என். ஆர். எச். எம் ஊழல் தொடர்பான விசாரணைக்கான மத்திய புலனாய்வுப் பிரிவின் (சிபிஐ) சிறப்பு நீதிமன்றத்தில் லக்னோவில் சிறப்பு நீதிபதியாகவும் பணியாற்றினார்.

15 நவம்பர் 2016 அன்று அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். மேலும் 23 மார்ச் 2018 அன்று நிரந்தர நீதிபதியாக ஆனார்.

நீதிமன்ற நீதிபதியாக, உத்தரப் பிரதேச மருத்துவப் பள்ளிகளில் உத்தரப் பிரதேசத்திற்கு வெளியே உள்ள மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்களைச் சேர்ப்பதில் பாகுபாடு காட்டப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்துமாறு தீட்சித் உத்தரப் பிரதேச அரசுக்கு உத்தரவிட்டார்.[6] இவர் ஆகத்து 9,2021 அன்று ஓய்வு பெற்றார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 "Hon'ble Mrs. Justice Rekha Dikshit". Allahabad High Court.
  2. "Taj Corridor case hearing deferred till May 23". DNA India (in ஆங்கிலம்). 2007-05-15. பார்க்கப்பட்ட நாள் 2020-11-05.
  3. "NRHM: 3rd chargesheet filed, PSU boss, 2 firm owners named". The Indian Express (in ஆங்கிலம்). 2012-04-06. பார்க்கப்பட்ட நாள் 2020-11-05.
  4. 4.0 4.1 4.2 4.3 Subhash Mishra (17 Nov 2016). "Indian Navy: High court new judge set benchmark with Shah Bano verdict | Lucknow News - Times of India". The Times of India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-11-05.
  5. "What is Shah Bano case?". The Indian Express (in ஆங்கிலம்). 2017-08-23. பார்க்கப்பட்ட நாள் 2020-11-05.
  6. "Allahabad High Court asks UP to 'look into discrimination against medical students from outside'". Firstpost. 2017-05-16. பார்க்கப்பட்ட நாள் 2020-11-05.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரேகா_தீட்சித்&oldid=3905249" இலிருந்து மீள்விக்கப்பட்டது