ரெட் டீ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

ரெட் டீ (Red Tea) 1969 இல் ஹிக்கின்பாதம்ஸ் நிறுவனம் வெளியிட்ட ஒரு ஆங்கிலப் புதினம். இதனை எழுதியவர் பால் ஹாரிஸ் டேனியல் (பி. எச். டேனியல்).[1][2] இப்புதினம் பிரித்தானிய ஆட்சியின் போது சென்னை மாகாணத்தில் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் வாழ்வைக் கதைக்களமாகக் கொண்டுள்ளது.[3] தமிழில் இதை “எரியும் பனிக்காடு” என்ற தலைப்பில் இரா. முருகவேள் மொழிபெயர்த்துள்ளார்; விடியல் பதிப்பகம் வெளியிட்டுள்ளது.[4] டேனியர் ஒரு மருத்துவர். 1941-65 காலகட்டத்தில் பல அசாமியத் தேயிலைத் தோட்டங்களில் தலைமை மருத்துவ அதிகாரியாகப் பணியாற்றியவர். தொழிற்சங்க ஒருங்கிணைப்பாளராகவும் இருந்தவர். அப்போது பல தேயிலைத் தொழிலாளர்களை நேர்கண்டு அவர்களது அனுபவங்களைப் பதிவு செய்தார். அவற்றை ”ரெட் டீ” புதினத்தைத் எழுதப்பயன்படுத்தினார். கருப்பன், வள்ளி ஆகியோரின் வாழ்வை விவரிக்கும் கற்பனைக் கதையாக இருப்பினும், இப்புதினம் தேயிலைத் தொழிலாளர்களின் நிஜ வாழ்வை ஆவணப்படுத்தும் முயற்சியாகவே எழுதப்பட்டது. சென்னைப் பண்ணையார் சட்டம், 1903 இனால் எவ்வாறு தேயிலைத் தொட்டத் தொழிலாளர்களின் வாழ்வு பாதிக்கப்பட்டது என்பதைப் பதிவு செய்கிறது. தொழிலாளர்களின் அவல வாழ்க்கை, கடன் அடிமை முறை, அதிலிருந்து தப்ப இயலாமல் அவர்கள் படும் பாடும் போன்றவற்றை விவரிக்கிறது.[5][6]

2013 இல் வெளியான பரதேசி தமிழ்த் திரைப்படம் இப்புதினத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்டது.[7]

மேற்கோள்கள்[தொகு]

  1. An Annotated Bibliography of Indian English Fiction. Atlantic Publishers & Dist. பக். 453–. ISBN 978-81-7156-998-4. http://books.google.com/books?id=Wjr5pOPAFTUC&pg=PA453. பார்த்த நாள்: 31 March 2013. 
  2. "Catalogue record for Red Tea". WorldCat. பார்த்த நாள் 31 March 2013.
  3. Bala a master at crafting the story of slavery
  4. பி. எச் டேனியல்; இரா முருகவேள் (2007). எரியும் பனிக்காடு. விடியல் பதிப்பகம். http://books.google.com/books?id=VXuPYgEACAAJ. பார்த்த நாள்: 31 March 2013. 
  5. C. J. George (1994). Mulk Raj Anand, His Art and Concerns: (a Study of His Non-autobiographical Novels). Atlantic Publishers & Dist. பக். 71–. ISBN 978-81-7156-445-3. http://books.google.com/books?id=M7LSHdlvRtcC&pg=PA71. பார்த்த நாள்: 6 April 2013. 
  6. Kavita Philip (1 January 2004). Civilising Natures: Race, Resources and Modernity in Colonial South India. Orient BlackSwan. பக். 109–. ISBN 978-81-250-2586-3. http://books.google.com/books?id=CevmNs63nM0C&pg=PA109. பார்த்த நாள்: 6 April 2013. 
  7. "Film | Bleak house". HT Mint. 14 February 2013. http://www.livemint.com/Leisure/vgzhqaUsAy15m0jEccad1M/Film--Bleak-house.html. பார்த்த நாள்: 14 February 2013. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரெட்_டீ&oldid=1398103" இருந்து மீள்விக்கப்பட்டது