ரூத் இங்கிலாந்து

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ரூத் இங்கிலாந்து
பிறப்பு29 மார்ச்சு 1970 (1970-03-29) (அகவை 54)
இன்ஃபீரோவ் (Inkberrow)
வொர்செஸ்டர்ஷைர்
இங்கிலாந்து
பணிநடிகை
தொலைக்காட்சி தொகுப்பாளர்
செயற்பாட்டுக்
காலம்
1992–தற்சமயம்
வாழ்க்கைத்
துணை
மைக்கேல் ஹாக் (2005–தற்சமயம்)

"ரூத் இங்கிலாந்து" (ஆங்கிலம் : Ruth England) இவர் மார்ச் 29 - 1970 ஆண்டு இங்கிலாந்தின் வொர்செஸ்டர்ஷைர், இன்ஃபீரோவ்வில், (Inkberrow) பிறந்தார். இவர் ஒரு பிரித்தானிய தொலைக்காட்சி தொகுப்பாளர் மற்றும் நடிகை ஆவார். தற்போது, இவர் கணவர் மைக்கேல் ஹாக், இவர் ஒரு ஓய்வுப் பெற்ற முன்னாள் ஐக்கிய அமெரிக்க இராணுவச் சிறப்புப் படை அதிகாரியாவார். இவருடன் இணைந்து டிஸ்கவரி தொலைக்காட்சியின் நிகழ்ச்சியான ஆண், பெண், காடு (Man, Woman, Wild) என்ற தொடர் நிகழ்ச்சியில் நடித்துள்ளார். மேலும் வெஸ்ட்மின்ஸ்டர், இங்கிலாந்து பல்கலைக்கழகத்தில் ஒரு பட்டதாரி ஆவார். மற்றும் பிபிசி, சிஎன்பிசி, ஐ தொலைக்காட்சி மற்றும் பாக்ஸ் தொலைக்காட்சி ஆகியவற்றில் பணியாற்றியுள்ளார்.

வேலைகள் மற்றும் தொகுப்புகள்[தொகு]

  • ஜெயில்ப்ரேய்க்(Jailbreak) - ((சேனல் 5 வின் தொலைக்காட்சி தொடரின் - இணை தொகுப்பாளர்)) - 2000
  • அன்டர் பிரஸ்சுர் (Under Pressure) - 2001.
  • விஷ் யூ வேர் ஹியர்...? (Wish You Were Here...?) - (ஜ தொலைக்காட்சி தொகுப்பாளர்), 2001 - 2003
  • போர்விர் ஈடன் (Forever Eden) - தொகுப்பாளர் 2004.
  • இந்த வழியில் நடக்க (Walk This Way) - (ஜ தொலைக்காட்சி தொகுப்பாளர்)

2004.

  • விஷ் யூ வேர் ஹியர் டுடே, (Wish You Were Here Today), - (ஜ தொலைக்காட்சி தொகுப்பாளர்), 2005.
  • துவக்க விற்பனை புதையல் வேட்டை (Boot sale Treasure Hunt) - (ஜ தொலைக்காட்சி தொகுப்பாளர்).
  • 5 செய்தி (Five News) - (சேனல் 5 நியூஸ் தொகுப்பாளர்)
  • தி பிக் ப்ரேக்ஃபாஸ்ட் (The Big Breakfast) - சேனல் 4 (செய்தி வாசிப்பாளர்)
  • ஸ்கை ஹய்க் (Sky High) - ஜ தொலைக்காட்சி சென்றால் 2007
  • கிறீச்சொலி பாக்ஸ் (Squawk Box) - சி. என். பி. சி 2008.
  • பிபிசி1 பிரைம்டைம் இன்சைட் அவுட் (BBC1 Primetime Inside Out) - (நடப்பு விவகாரங்கள் பற்றிய தொகுப்பாளர்), 2009.

வெளியினைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ரூத்_இங்கிலாந்து&oldid=3925640" இலிருந்து மீள்விக்கப்பட்டது