ருக்சானா கான் (எழுத்தாளர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ருக்சானா கான் ( Rukhsana Khan  ; பிறப்பு 1962) ஒரு கனடிய குழந்தைகள் எழுத்தாளரும் , கதைசொல்லியும் ஆவார். இவருடைய கதைகள் அனைத்து கலாச்சாரங்களின் குழந்தைகளையும் கிழக்கு பூர்வீக கலாச்சாரங்களுடன் இணைக்க உதவுகின்றன.

சுயசரிதை[தொகு]

ருக்சானா கான் பாக்கித்தானின் லாகூரில் 1962 இல் பிறந்தார். இவருக்கு மூன்று வயதாக இருந்தபோது இவரது குடும்பம் கனடாவுக்கு குடிபெயர்ந்தது. இவர் ஒன்டாரியோவின் டன்டாஸில் வளர்ந்தார். செனிகா கல்லூரியில் பட்டம் பெற்ற இவர், உயிரியல்-வேதியியல் தொழில்நுட்ப வல்லுநரானார்.  இவருக்கு மூன்று மகள்கள் மற்றும் ஒரு மகன் உட்பட நான்கு குழந்தைகள் உள்ளனர். தற்போது தனது கணவருடன் ஒன்டாரியோவின் தொராண்டோவில் வசிக்கிறார். [1] [2]

ஆடம்ஸ் வேர்ல்ட் குழந்தைகள் காணொளிகளுக்கு பாடல்கள் எழுதுவதன் மூலம் ருக்சானா கானின் எழுத்து வாழ்க்கை தொடங்கியது. [3] இவரது கதைகள் மெசேஜ் இன்டர்நேஷனல் மற்றும் கஹானி இதழ்களில் வெளிவந்துள்ளன.  குழந்தைகளுக்கான இவரது விருது பெற்ற புத்தகங்களில் பட புத்தகங்கள், சிறுகதை தொகுப்புகள் மற்றும் புதினங்கள் போன்றவை அடங்கும். இவர் குழந்தைகள் புத்தக எழுத்தாளர்கள் மற்றும் இல்லஸ்ட்ரேட்டர்கள் சங்கம், கனடாவின் எழுத்தாளர் சங்கம், மற்றும் கதைசொல்லல் டொராண்டோ ஆகியவற்றின் உறுப்பினராக உள்ளார். [3] மேலும், இவர், சர்வதேச கதைசொல்லல் நெட்வொர்க்கில் உறுப்பினராகவும் உள்ளார். [4]

விருதுகள்[தொகு]

  • இவரது, 'பிக் ரெட் லாலிபாப்' புத்தகம், படப் புத்தக உரைக்கான 2011 கோல்டன் கைட் விருதை வென்றது. [5]
  • 'பிக் ரெட் லாலிபாப்' 2011 இல், சார்லோட் சோலோடோ விருதை வென்றது. [6]
  • 'வாண்டிங் மோர்' 2010 இல் சர்வதேச வாசிப்பு சங்கத்தால் உலகளாவிய சமூகத்திற்கான குறிப்பிடத்தக்க புத்தகமாக அங்கீகரிக்கப்பட்டது [7]

புத்தகங்கள்[தொகு]

பட புத்தகங்கள்[தொகு]

  • கிங் பாஃர் எ டே (2014)
  • பிக் ரெட் லாலிபாப் (2010)
  • சில்லி சிக்கன் (2005)
  • ரூலர் ஆஃப் தி கோர்ட்யார்ட் (2003)
  • கிங் ஆஃப் தி ஸ்கைஸ் (2001)
  • தி ரோஸஸ் இன் மை கார்பெட்ஸ் (1998)
  • பெட் டைம் பா-ஆ-எல்க் (1998)

புதினங்கள்[தொகு]

  • வான்டிங் மோர் (2009)
  • டாஹ்லிங், இஃப் யூ லவ் மீ வுட் யூ ப்ளீஸ், ப்ளீஸ் ஸ்மைல் (1999)

சிறுகதைகள்[தொகு]

  • எ நியூ லைஃப் (2009)
  • மெனி விண்டோஸ் எலிசா கார்போன் மற்றும் உமா கிருஷ்ணசாமியுடன் இணைந்து எழுதியது (2008)
  • முஸ்லிம் சைல்ட் (1999)

சான்றுகள்[தொகு]

  1. "Groundwood Books: For the finest in children's books : Authors and Illustrators". www.anansi.ca. Archived from the original on 8 June 2011. பார்க்கப்பட்ட நாள் 3 February 2022.
  2. "CM Magazine Profile: Rukhsana Khan". Umanitoba.ca. Archived from the original on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2015-04-01.
  3. 3.0 3.1 [1] பரணிடப்பட்டது 6 சூலை 2011 at the வந்தவழி இயந்திரம்
  4. Beatriz Montero. "Red Internacional de Cuentacuentos". Cuentacuentos.eu. பார்க்கப்பட்ட நாள் 2015-04-01.
  5. "2011 Golden Kite Awards and Sid Fleischman Award Announced". Society of Children's Book Writers and Illustrators. 23 February 2011. Archived from the original on 7 March 2011. பார்க்கப்பட்ட நாள் 27 February 2011.
  6. "Charlotte Zolotow Award Books". CCBC Booklists. Archived from the original on 26 February 2007. பார்க்கப்பட்ட நாள் 1 January 2010.
  7. "Wanting Mor". Groundwood Books. 6 July 2011. Archived from the original on 6 July 2011. பார்க்கப்பட்ட நாள் 13 March 2019.