ரீ-சீக்குவல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ரீ-சீக்குவல் சைபேசுவினதும் மைக்ரோசாப்ட்டினதும் வினவல் அமைப்பு மொழியின் (சீக்குவல்) ஓர் நீட்சியாகும். இது அமெரிக்க நியம அமைப்பில் 1992 ஆண்டில் நியமத்தை அடிப்படையாகக்கொண்டு மேலதிகவசதிகளுடன் மெருகூட்டப்பட்ட ஓர் பதிப்பாகும். இதன்காரணமாக ரீ-சீக்குவலில் எழுதப்படும் நிரலானது ஏனைய தரவுத் தளங்களில் இயங்கும் என்று சொல்வதற்கில்லை. எனவே நிரலாக்கம் செய்யும்போது இயன்றவரை சீக்குவல்-92 இன் நியமத்தை ஒத்ததாக எழுதுமாறு பரிந்துரைக்கபப்டுகிறது. இதில் வழமையான வினல் அமைப்பு மொழிகள் போலவே வினவ முடியும். தவிர தரவை வரையறுக்கவும் முடியும் (Data Definition Language), தவிர தரவைக் கையாளவும் முடியும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ரீ-சீக்குவல்&oldid=1361893" இருந்து மீள்விக்கப்பட்டது