சைபேசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சைபேஸ் இன்க்.
வகைபொது NYSE: SY
நிறுவுகைபேர்கிலி, கலிபோர்னியா (1984)
தலைமையகம்டப்லின் கலிபோர்னியா
முதன்மை நபர்கள்ஜான் எஸ் சென்; தலைவர், முதன்மை செயல் அதிகாரி
தொழில்துறைகணினி மென்பொருள்
உற்பத்திகள்சைபேஸ் மென்பொருட்கள்
வருமானம் $ 1.026 பில்லியன் (2007)
பணியாளர்4,000+ (2008)
இணையத்தளம்www.sybase.com
Sybase headquarters in Dublin CA

சைபேஸ் (Sybase) நிறுவனம் ஓர் எண்டபிரைஸ் மென்பொருட் சேவைகள் நிறுவனம் ஆகும். இது தகவலை வினைத்திறனுடன் நிர்வாகிப்பதற்கான மென்பொருட்களை உருவாக்கி வருகின்றது.

வரலாறு[தொகு]

சைபேஸ் ஆரக்கிளுக்கு அடுத்தபடியாக தகவல் முகாமைத்துவ மென்பொருட்களை உருவாக்கும் நிறுவன் ஆகும். மைக்ரோசாப்டுடன் OS/2 இயங்குதளத்திற்கு சீக்குவல் சேர்வர் உருவாக்குவதில் மூலநிரல்களைப் பகிர்ந்ததன் மூலம் இந்த நிலையை எய்தியது. அச்சமயத்தில் சைபேஸ் இன் தரவுத் தளமானது :"சைபேஸ் சீக்குவல் சேர்வர்" என்றறியப்பட்டது. இதன் 4.9 பதிப்பு வரை சைபேஸ் மற்றும் மைக்ரோசாப்ட் இன் தரவுத்தளமும் இரண்டும் ஏறத்தாழ ஒன்றாகவே இருந்தது. எனினும் இலாபத்தைப் பங்கிடுவதில் ஏற்பட்ட உடன்பாடு ஏற்படாததால் இரண்டும் பிரிவடைந்தது தமது வழியில் சென்றன. மிகப்பெரிய மாறுபாடு யாதெனில் சைபேஸ் யுனிக்ஸ் வழிவந்ததாகும் மைக்ரோசாப்ட் இன் சீக்குவல் சேர்வர் ஆனது விண்டோஸ் எண்டி இயங்குதளத்தில் வினைத்திற்னாக இயங்குதற்கென வடிவமைக்கப்பட்டதாகும். சைபேஸ் தொடர்ந்தும் விண்டோஸ் இயங்குதளத்திற்கும், யுனிக்ஸ் மற்றும் லினக்ஸ் இயங்குதளத்திற்கு தரவுத் தளத்தை விருத்தி செய்து வருகின்றது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சைபேசு&oldid=2598981" இலிருந்து மீள்விக்கப்பட்டது