ரீடர்ஸ் டைஜஸ்ட்
ரீடர்ஸ் டைஜஸ்ட்டின் 1922 பெப்ரவரி அட்டை | |
முதன்மை ஆசிரியர் | புரூஸ் கெல்லி |
---|---|
Total circulation (2016) | 2,662,066[1] |
முதல் வெளியீடு | பெப்ரவரி 5, 1922 |
நிறுவனம் | ட்ரஸ்ட் மீடியா பிராண்ட், இன்ஸ் |
நாடு | ஐக்கிய அமெரிக்கா |
அமைவிடம் | நியூயார்க், மன்ஹாட்டன் |
வலைத்தளம் | rd |
ISSN | 0034-0375 |
ரீடர்ஸ் டைஜஸ்ட் (Reader's Digest) என்பது ஒரு அமெரிக்க பொது - குடும்பப் பத்திரிகை ஆகும், இது ஒரு ஆண்டுக்கு பத்து தடவை வெளியிடப்பட்டது. முன்னர் இதன் தலைமையகம் நியூயார்கின், சாப்பாக்வாவில் செயல்பட்ட நிலையில் தற்போது மன்ஹாட்டனின் மிட் டவுனில் தலைமையிடம் உள்ளது. இந்த இதழ் 1920 ஆம் ஆண்டில் டிவிட் வாலஸ் மற்றும் லிலா பெல் வாலஸ் ஆகியோரால் நிறுவப்பட்டது. பல ஆண்டுகளாக, ரீடரின் டைஜஸ்ட் அமெரிக்காவில் அதிக அளவில் விற்பனையான பொழுதுபோக்கு இதழாக இருந்தது; இதை 2009 இல் பெட்டர் ஹோம் அண்டு கார்டன் இதழ் முந்தியது. மேடையார்க் ஆய்வின்படி (2006), ரீடரின் டைஜெஸ்ட் இதழானது ஃபார்ச்சூன், தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல், பிசினஸ் வீக் மற்றும் இன்க் ஆகியவற்றைக் காட்டிலும் 100,000 டாலர் குடும்ப வருமானம் கொண்ட வாசகர்களில் அதிகமான வாசகர்களைக் கொண்டுள்ளது.[2]
ரீடர்ஸ் டைஜெஸ்ட்டின் உலகளாவிய பதிப்புகள் 70 க்கும் மேற்பட்ட நாடுகளில் 21 மொழிகளில் 49 பதிப்புகளொடு கூடுதலாக 40 மில்லியன் மக்களைச் சென்றடைந்தது. இக்காலகட்டத்தில் இந்த இதழ் உலகின் 10.5 மில்லியன் எண்ணிக்கையில் விற்பனையைக் கொண்டிருந்தது, இது உலகின் மிகப்பெரிய அளவில் விற்பனையாகும் இதழாக இருந்தது.
மேலும் இது புடையெழுத்து, எண்ணியல், ஒலிவடிவு, மற்றும் ரீடரின் டைஜெஸ்ட் லார்ஜ் பிரிண்ட் என்ற பெயரில் பெரிய எழுத்தில் வெளியிடப்படுகிறது. இந்த பத்திரிகை கையடக்கமானதாக, பிற அமெரிக்கப் பத்திரிகைகளில் கிட்டத்தட்ட பாதி அளவு கொண்டது. எனவே, 2005 இன் கோடைக் காலத்தில், அமெரிக்கப் பதிப்பானது "உங்கள் பாக்கெட்டில் அமெரிக்கா" என்ற முழக்கத்தை ஏற்றுக்கொண்டது. 2008 சனவரியில், இந்த முழக்கம் "நல் வாழ்க்கை பகிர்வு" என மாற்றப்பட்டது.
வரலாறு
[தொகு]இந்த இதழைத் துவங்கிய, 35 ஆண்டுகள் வரைக்கும், விலையில் எவ்வித மாறுதலும் செய்யவில்லை. இதனால், வாசகர்களிடம் நன்மதிப்பையும், நம்பிக்கையையும் பெறமுடிந்தது. அவரவர்க்கு விருப்பமான பகுதி, இன்ன இன்ன பக்கங்களில் இருக்கும் என்ற நிச்சயமும், வாசகர்களை வெகுவாகக் கவர்ந்தது, அதன் வாசகர்களிடம் இந்தப் பழக்கம், இன்னமும் மாறவில்லை.
இந்த நவீன அவசர உலகில், எதையும் பொறுமையாக, விரிவாகப் படித்துக் கொண்டிருக்க, பெரும்பாலான வாசகர்களுக்கு, நேரம் கிடைக்காது என்பதை உணர்ந்த டேவிட் வேலஸ், எவ்வளவு விரிவான கட்டுரையையும், சுருக்கி, சுவை குன்றாது கொடுக்கத் தூண்டினார். இந்தத் திறன்தான் இன்றும், இந்த இதழுக்கு உறுதுணையாக இருப்பதுடன், வெற்றிக்கும் வித்தாக ஆனது.[3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Consumer Magazines". Alliance for Audited Media. Archived from the original on 23 ஜனவரி 2017. பார்க்கப்பட்ட நாள் 6 October 2016.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ Doran, James (17 November 2006). "Reader's Digest Sold to Private Equity Firm for $2.4bn". தி டைம்ஸ் (London). http://business.timesonline.co.uk/tol/business/industry_sectors/media/article639494.ece. பார்த்த நாள்: 24 October 2008.
- ↑ "ரீடர்ஸ் டைஜஸ்ட் (Readers Digest) வெற்றியாக வெளியாவதன் உண்மை!". கட்டுரை. கீற்று. 09 ஜூன் 2017. பார்க்கப்பட்ட நாள் 11 சூன் 2017.
{{cite web}}
: Check date values in:|date=
(help)[தொடர்பிழந்த இணைப்பு]