ரிச்சர்ட் ராப்சன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ரிச்சர்டு ராப்சன்
Richard Robson
பிறப்பு4 சூன் 1937 (1937-06-04) (அகவை 86)
குளூசுபர்ன்,மேற்கு யாக்சையர், இங்கிலாந்து
துறைகனிம வேதியியல்
பணியிடங்கள்மெல்பேர்ண் பல்கலைக்கழகம்
கல்வி கற்ற இடங்கள்ஆக்சுபோர்டு பல்கலைக்கழகம் (பி.ஏ, 1959) (டி,பில், 1962)
அறியப்படுவதுஒருங்கிணைப்புப் பலபடிகள்
விருதுகள்பரோசு விருது, ஆத்திரேலிய அறிவியல் கழகத்தின் உறுப்பினர்

ரிச்சர்ட் ராப்சன் (Richard Robson) ஆத்திரேலியாவிலுள்ள மெல்போர்ன் பல்கலைக்கழகத்தின் வேதியியல் பேராசியர் ஆவார். இவர் 1937 ஆம் ஆண்டு சூன் மாதம் 4 ஆம் நாள் பிறந்தார்[1]. ஒருங்கிணைப்புப் பலபடிகள் குறிப்பாக உலோக-கரிம கட்டமைப்புகளில் நிபுணத்துவம் பெற்ற ராப்சன் 200 எண்ணிக்கைக்கும் மேற்பட்ட கட்டுரைகளை வெளியிட்டுள்ளார். [2] இடைநிலைத் தனிமங்கள் பங்குபெறும் படிகப் பொறியியலின் முன்னோடி என்று ராப்சன் கருதப்படுகிறார். [3][4]

கல்வி[தொகு]

ராப்சன் இங்கிலாந்தின் மேற்கு யார்க்சையரில் உள்ள கிளசுபர்னில் பிறந்தார். ஆக்சுபோர்டு பல்கலைக்கழகத்தில் வேதியியலைப் படித்தார். 1959 ஆம் ஆண்டில் இளங்கலையும் 1962 ஆம் ஆண்டில் தத்துவவியலில் முனைவர் பட்டமும் பெற்றார். கலிபோர்னியா தொழில்நுட்ப நிறுவனத்தில் 1962-64 ஆம் ஆண்டுகள் மற்றும் இசுடான்போர்டு பல்கலைக்கழகத்தில் 1964-65 ஆம் ஆண்டுகளில் முனைவர் பட்டமேற் படிப்பு ஆராய்ச்சியை மேற்கொண்டார், மெல்போர்ன் பல்கலைக்கழகத்தில் வேதியியல் விரிவுரையாளர் தகுதியைப் பெறுவதற்கு முன்பு 1966-70 ஆம் ஆண்டு வரை இவர் தனது தொழிலில் அங்கேயே இருந்தார்.

அங்கீகாரம்[தொகு]

இராயல் ஆத்திரேலிய வேதியியல் நிறுவன கனிமப் பிரிவின் மதிப்புமிக்க பர்ரோசு விருதை பேராசிரியர் ராப்சன் 1998 ஆம் ஆண்டு பெற்றார். மற்றும் ஆத்திரேலிய அறிவியல் கல்விக்கழகத்தில் 2000 ஆம் ஆண்டின் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்[5].

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ரிச்சர்ட்_ராப்சன்&oldid=3569793" இருந்து மீள்விக்கப்பட்டது