ரிசிக்ளோன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ரிசிக்ளோன் (சூறாவளி எனத் தமிழில் பொருள்படும உருசிய மொழியில்: Циклон)இது முன்னாட் சோவியத் ஒன்றியத்தினால் முதலாவதாக உருவாக்கப்பட்ட புவியின் இடச் சேவையை வழங்கும் செய்மதியாகும் இதைத் தற்போது உருசிய விண்வெளிப் படையினர் நிருவாகித்து வருகின்றனர்.

1967 இற்கும் 1978 இற்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் 31 செய்மதிகள் கப்புஸ்டின் ரார், பலிஸ்டிக் ஏவுதளங்களில் இருந்து கொஸ்மோஸ் - 3, கொஸ்மோஸ்-எம் ரக ராக்கெட்டுகள் ஊடாக வானில் ஏவிவிடப்பட்டது. இக்கருத்திட்டமானது 1950 களில் உருவாக்கப்பட்டு 1962 இல் திட்ட முன்வரைவானது அங்கீகரிப்பட்டிருந்தாலும் 1972இலேயே பல்வேறு காலதாமங்களுக்கு மத்தியில் இயங்குநிலைக்குக் கொண்டுவரப்பட்டது. பருஸ் செப்ரா செய்மதிகள் இதைத் தொடர்ந்து வந்தது. உருசியா தற்போது குளொனொஸ் செய்மதிகளை இயக்கி வருகின்றது.

உசாத்துணை[தொகு]

ரிசிக்ளோன் அணுகப்பட்டது 26 அக்டோபர் 2016.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ரிசிக்ளோன்&oldid=2747802" இருந்து மீள்விக்கப்பட்டது