ராபன் தீவு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
யுனெசுக்கோ உலகப் பாரம்பரியக் களம்
ராபன் தீவு
உலக பாரம்பரிய பட்டியலில் உள்ள பெயர்
SafrikaIMG 8414.JPG
ராபன் தீவிலுள்ள சிறைச்சாலைக் கட்டிடம். டேபிள் மலையைப் பின்னணியில் காணலாம்
வகைபண்பாடு
ஒப்பளவுiii, vi
உசாத்துணை916
UNESCO regionஆப்பிரிக்கா
ஆள்கூற்று33°48′24″S 18°21′58″E / 33.806734°S 18.366222°E / -33.806734; 18.366222ஆள்கூறுகள்: 33°48′24″S 18°21′58″E / 33.806734°S 18.366222°E / -33.806734; 18.366222
பொறிப்பு வரலாறு
பொறிப்பு1999 (23வது தொடர்)

ராபன் தீவு (Robben Island) தென்னாப்பிரிக்காவில் கேப் டவுன் அருகே உள்ள ஓர் தீவு. இத்தீவு நீள்வட்ட வடிவில் வடக்குத் தெற்காக 3.3 கிமீ நீளமும் 1.9 கிமீ அகலமும் கொண்டு 5.07 கிமீ² பரப்பளவில் அமைந்துள்ளது.[1] இது கடல்மட்டத்திலிருந்து அதிக ஏற்றமிறக்கமின்றி தட்டையாக உள்ளது. நெல்சன் மண்டேலா தாம் சிறையில் கழித்த 27 ஆண்டுகளில் 18 ஆண்டுகள் இங்குள்ள உயர்நிலை பாதுகாப்புள்ள சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்தார். அவரும் மற்ற அரசியல் கைதிகளும் அத்தீவிலிருந்த சுண்ணக்கல் சுரங்கங்களில் கட்டாயப் பணி புரிந்தனர். பணி புரிவதைவிட வேறெவருடனும் தொடர்பு கொள்ள அனுமதிக்கப்படவில்லை. முந்தைய தென்னாபிரிக்க குடியரசுத் தலைவராகப் பொறுப்பாற்றிய கலேமா மொட்லாந்தேயும் இங்கு பத்தாண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.[2] தற்போதைய குடியரசுத்தலைவர் யாக்கோபு சூமாவும் இங்கு சிறையில் வைக்கப்பட்டிருந்திருக்கிறார்.

மேற்சான்றுகள்[தொகு]

  1. "Avian Demography Unit: Robben Island". Department of Statistical Sciences, University of Cape Town. 2012-03-05 அன்று மூலம் பரணிடப்பட்டது. line feed character in |publisher= at position 36 (உதவி)
  2. "New S. Africa president sworn in". BBC News. 25 September 2008. 2008-11-22 அன்று பார்க்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ராபன்_தீவு&oldid=3569579" இருந்து மீள்விக்கப்பட்டது