உள்ளடக்கத்துக்குச் செல்

ராதிகா வாஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ராதிகா வாஸ், 2017 இல்.

ராதிகா வாஸ் (பிறப்பு 1973) இந்தியாவைச் சேர்ந்த மேடை நகைச்சுவை நடிகரும் எழுத்தாளருமாவார். மும்பையில் பிறந்துள்ள வாஸ், சென்னையில் விளம்பர நிர்வாகியாக பணிபுரிந்துள்ளார். நியூயார்க்கில் உள்ள சிரக்கியூஸ் பல்கலைக்கழகத்தில் விளம்பரப் படிப்பில் முதுகலைப் பட்டம் பெற்றுள்ளார்.[1]

வாழ்க்கை வரலாறு

[தொகு]

ராதிகா வாஸ், நாடகத் திறமையை கற்றுக்கொள்ள, கிரவுண்ட்லிங்ஸ் பள்ளி (லாஸ் ஏஞ்சல்ஸ்) மற்றும் இம்ப்ரூவல்யூஷன் (நியூயார்க்) போன்ற மேம்பட்ட நாடக வகுப்புகளுக்கு சென்று பயிற்சி பெற்றுள்ளார். இந்த வகுப்புகள், நடிகராகவும் எழுத்தாளராகவும் செயல்பட இவருக்கு உதவியுள்ளதாக பேட்டிகளில் கூறியுள்ளார்;[2] 2014 ஆம் ஆண்டில், அவர் நியூயார்க்கிலும், இந்திய நகரங்களான மும்பை, சென்னை, பெங்களுரு, கொச்சி, குர்கான் மற்றும் டெல்லியில் பெண்மைக்கு மாறானவள்: உரிமைக்கான புதைகுழிகள் என்ற நாடகத்தை நிகழ்த்தியுள்ளார். அதே ஆண்டில் செப்டம்பர் மாதம் அவரது பழையது, கோபக்காரன், மயிரடர்ந்தவன் என்ற தலைப்பிலான நாடகமும் நடிக்கப்பட்டுள்ளது. நிகழ்ச்சி ஒன்றில் நிர்வாணமாக நடித்தது இந்திய பார்வையாளர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. டைம்ஸ் ஆஃப் இந்தியா பத்திரிகையில் பல்வேறு சிறு கட்டுரைகளையும் இவர் எழுதியுள்ளார். பிரபல மேடைச் சிரிப்புரை நடிகர்களான பேட்ரிஸ் ஓ நீல் மற்றும் பில் ஹிக்ஸ் போன்றோரை தனக்கு முன்னோடியாக கருதி நிகழ்ச்சிகளை வடிவமைத்துள்ளார்.[3] நாடியா பி. மன்சூருடன் சர்க்கரையும் கொழுப்பும் என்ற இணையத்தொடரை இணைந்து உருவாக்கியுள்ளார். இது கோதம் விருதை வென்றது குறிப்பிடத்தக்கது [4] மேலும் இந்த தொடர் தற்போது அமேசான் நிறுவன தாயாரிப்பிலுள்ளது..[5]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "New York laughs out loud with 'Unladylike' Radhika Vaz | Latest News & Updates at Daily News & Analysis". Retrieved 2015-09-07.
  2. "Catch Radhika Vaz's Older. Angrier. Hairier. show at Distil - Indulge". Archived from the original on 4 March 2016. Retrieved 2015-09-07.
  3. "Stand up comic Radhika Vaz to perform in Chennai - The Times of India". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. Retrieved 2015-09-07.
  4. "Shugs and Fats winning the Breakthrough Series - Short Form 2015 Gotham Award for SHUGS AND FATS". YouTube.
  5. "Jill Soloway Re-Ups Overall Deal With Amazon Studios". 8 May 2017.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ராதிகா_வாஸ்&oldid=4394326" இலிருந்து மீள்விக்கப்பட்டது