உள்ளடக்கத்துக்குச் செல்

ராணி காயிதின்ல்யு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ராணி காயிதின்ல்யு
Rani Gaidinliu
பிறப்பு(1915-01-26)26 சனவரி 1915
பிரித்தானிய இந்தியா, மணிப்பூர் சமஸ்தானம், நூன்காவோ
இறப்பு17 பெப்ரவரி 1993(1993-02-17) (அகவை 78)
இந்திய ஒன்றியம், மணிப்பூர் லோன்காக்கோ
தேசியம்இந்தியர்
மற்ற பெயர்கள்Gaidiliu
பணிஜீலியாங்ராங் நாகர்களின் ஆன்மீக மற்றும் அரசியல் தலைவர்
அறியப்படுவதுபிரித்தானிய இந்தியப் பேரரசுக்கு எதிரான ஆயுதம் ஏந்திய போராட்டம்

காயிதின்ல்யு (Rani Gaidinliu, 26 சனவரி 1915 - 17 பெப்ரவரி 1993) என்பவர் இந்தியாவில் பிரித்தானிய ஆட்சிக்கு எதிராக இயங்கிய நாகா ஆன்மீக மற்றும் அரசியல் தலைவர் ஆவார். [1] இவர் தன் 13 வயதில், இவருடைய உறவினரான ஹாபூ ஜடொனங்கின் ஹெராகா என்ற சமய அமைப்பில் சேர்ந்தார். இந்த இயக்கமானது பின்னர் மணிப்பூர் உள்ளிட்ட நாகா பகுதிகளிலிருந்து பிரித்தானியர்களை விரட்டி அடிப்பதற்கான அரசியல் இயக்கமாக உருப்பெற்றது. இவர் இறைவி சேராச்சாமுண்டியின் அவதாரமாக ஹேராகா இயக்கத்தவர்களால், கருதப்பட்டார். [2] விடுதலை இயக்கத்தில் தீவிரமாக ஈடுபட்டதால் காயிதின்ல்யு 1932 ஆம் ஆண்டு இவரது 16 ஆம் வயதில் பிரித்தானிய ஆட்சியாளர்களால் கைது செய்யப்பட்டு, ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டார். 1937 ஆம் ஆண்டு சில்லாங் சிறையில் இவரை ஜவகர்லால் நேரு சந்தித்தார். இவருக்கு நேரு "ராணி" என்ற பட்டத்தை வழங்கினார், இதையடுத்து இவர் ராணி காயிதின்ல்யு என உள்ளூரில் புகழ் பெற்றார்.

இந்திய விடுதலைக்குப் பின்னர் 1947 இல் இவர் விடுதலை செய்யப்பட்டார். இதன் பிறகு இவர் தன் மக்கள் மேம்பாட்டிற்காகத் தொடர்ச்சியாகப் பணியாற்றினார். இவர் நாகர் சமய வழிபாட்டு முறைகளை ஆதரிப்பவராகவும், நாகர்களை கிறித்துவச் சமயத்துக்கு மாற்றுவதைக் கடுமையாக எதிர்ப்பவராகவும் இருந்தார். விடுதலைப் போராட்ட வீரராகக் கௌரவிக்கப்பட்ட இவருக்கு இந்திய அரசாங்கத்தால் பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது.

குறிப்புகள்

[தொகு]
  1. Kusumlata Nayyar (2002). Rani Gaidinliu. Ocean Books. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-88322-09-1. பார்க்கப்பட்ட நாள் 12 June 2013.
  2. Arkotong Longkumer. Reform, Identity and Narratives of Belonging: The Heraka Movement in Northeast India. Continuum International Publishing Group. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8264-3970-3. பார்க்கப்பட்ட நாள் 12 June 2013.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ராணி_காயிதின்ல்யு&oldid=4000617" இலிருந்து மீள்விக்கப்பட்டது