ராஜேஷ் லகானி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ராஜேஷ் லகானி
பிறப்புMissing required parameter 1=''month''! , [[]](-Missing required parameter 1=month!-00)
[[]], [[]], [[]], இந்தியா இந்தியா
பணிமுன்னாள் தலைமை தேர்தல் அதிகாரி

ராஜேஷ் லகானி (Rajesh Lakhoni) தமிழ்நாட்டின் தலைமைத் தேர்தல் அதிகாரியாகப் பணிபுரிந்த இந்திய ஆட்சிப் பணி அலுவலர் ஆவார். இவர் 01.12.2015 முதல் 28.02.2018 வரை இப்பதவியில் இருந்தார்.[1] தமிழ்நாட்டில் தலைமைத் தேர்தல் அதிகாரியாக பொறுப்பேற்றவுடன் இவர் தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தம், புதிய வாக்காளர்கள் சேர்ப்பு ஆகியவற்றில் தீவிரம் காட்டினார். கல்லூரிகளில் சிறப்பு முகாம் அமைத்து புதிய வாக்காளர்களைச் சேர்த்தார். 2016-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் 100 சதவிகித வாக்குப்பதிவு என்ற முழக்கத்தை முன்வைத்தார். இதற்காக, கல்லூரிகளில் மட்டுமல்லாது பொதுநல அமைப்புகளுடன் இணைந்து, விழிப்புணர்வு பிரச்சாரங்களையும் மேற்கொண்டார்.[2] இந்திய ஆட்சிப்பணி அதிகாரியான இவர் கன்னியாகுமரி மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியராக 16.07.2003 முதல் 21.11.2004 முடிய பணியாற்றினார்.[3] அங்கு சுனாமி ஏற்பட்டபோது சிறப்பாக செயல்பட்டார். பின்னர், தேனி மாவட்ட ஆட்சியராக 01.10.2005 முதல் 11.10.2006 வரை பணிபுரிந்தார்.[4] 2006 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் எம். பி. விஜயகுமார் அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் மாநில திட்ட இயக்குநராக பணியிடம் மாற்றம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து அவருக்குப் பதிலாக இவர் சென்னை பெருநகர மாநகராட்சி ஆணையராக பணியேற்றார்.[5]

மேற்கோள்கள்[தொகு]

  1. "NAMES OF CHIEF ELECTORAL OFFICERS OF TAMIL NADU". Election Commission of India. பார்த்த நாள் 3 பெப்ரவரி 2019.
  2. "”தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரியாக நீடிக்க விருப்பம் இல்லை..!” - கடிதம் கொடுத்தாரா ராஜேஷ் லக்கானி?!". விகடன் (23 பெப்ரவரி 2018). பார்த்த நாள் 3 பெப்ரவரி 2019.
  3. "மாவட்ட ஆட்சியர்கள்". kanniyakumari.nic.in. பார்த்த நாள் 3 பெப்ரவரி 2019.
  4. "மாவட்ட ஆட்சியர்கள்". theni.nic.in. பார்த்த நாள் 3 பெப்ரவரி 2019.
  5. "Rajesh Lakhoni takes over as Corporation Commissioner". The Hindu (17 நவம்பர் 2006). பார்த்த நாள் 3 பெப்ரவரி 2019.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ராஜேஷ்_லகானி&oldid=3149259" இருந்து மீள்விக்கப்பட்டது