இராசா முத்தையா அரசு மருத்துவக் கல்லூரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
கடலூர் அரசு தலைமை மருத்துவக் கல்லூரி & மருத்துவமனை (இராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனை)
நிறுவப்பட்டது1985
வகைமருத்துவக் கல்லூரி
துறை முதல்வர்டாக்டர். ர.ரமேஷ்
அமைவுஅண்ணாமலைநகர், சிதம்பரம், கடலூர் மாவட்டம் தமிழ்நாடு, இந்தியா
(11°23′47.93″N 79°42′57.04″E / 11.3966472°N 79.7158444°E / 11.3966472; 79.7158444ஆள்கூறுகள்: 11°23′47.93″N 79°42′57.04″E / 11.3966472°N 79.7158444°E / 11.3966472; 79.7158444)
வளாகம்கிராமப்புறம்
இணையதளம்http://www.annamalaiuniversity.ac.in/rmmc/index.php

கடலூர் அரசு தலைமை மருத்துவக் கல்லூரி & மருத்துவமனை தமிழ்நாட்டில் கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரம் நகரில் அமைந்துள்ள ஒரு அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை ஆகும்

வரலாறு[தொகு]

ராஜா முத்தையா இன்ஸ்டிடியூட் ஆப் ஹெல்த் சயின்ஸ் 1980 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டு பல் மருத்துவ கல்லூரி துவங்கப்பட்டது. இரண்டாம் கட்ட வளர்ச்சியில், 1985 ஆம் ஆண்டு ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி தொடங்கப்பட்டது. எம்.பி.பி.எஸ். மருத்துவ பாடப்பிரிவில் இந்திய மருத்துவ கவுன்சில் 125 இடங்களுக்கு அங்கீகாரம் அளித்தது. 125 மருத்துவ சேர்க்கைக்கான அங்கீகாரம் பெற்ற பின் மருத்துவக் கவுன்சில் 2003 ல் 150 இடங்களாக மேம்படுத்தப்பட்டது. மேலும் 18 முதுகலை மருத்துவ பட்டப் படிப்புகள் தொடங்கப்பட்டன. பின்னர் 10 டிப்ளமோ படிப்புகள் சேர்க்கப்பட்டன. மேலும் இயன்முறை மருத்துவ படிப்புகள்(MPT) ஐந்து வெவ்வேறு சிறப்பு பிரிவுகளில் தொடங்கப்பட்டன.

பெயர் மாற்றம்[தொகு]

2020 பிப்ரவரி மாதம் தமிழக சட்டமன்றத்தில் 2020-21 பட்ஜெட் தாக்கல் செய்யும்போது இராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியை கடலூர் மாவட்ட தலைமை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையாகப் பெயர் மாற்றம் செய்ய அறிவிக்கப்பட்டது[1]

வசதிகள்[தொகு]

இராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியில் அனைத்து வகை சிறப்புப் பிரிவுகளும் பெற்ற 1200 உயர் தர படுக்கை வசதிகள் கொண்ட மருத்துவக் கல்லூரி மருத்துவமனை உள்ளது.[2] அதி நவீன வசதிகளுடன் கூடிய 24 மணி நேர ஆய்வக மற்றும் கதிரிய இமேஜிங் சேவை டாப்ளர், அல்ட்ராசவுண்ட், மாமோகிராஃபி, டிஜிட்டல் எக்ஸ்-ரே, சி-ஆர்ம், CT ஸ்கேன், எம்.ஆர்.ஐ போன்ற வசதிகளைக் கொண்டுள்ளது.

மேலும், சிதம்பரம் அரசு காமராசர் மருத்துவமனை தற்போது இந்த மருத்துவக் கல்லூரியுடன் இணைக்கப்பட்டுள்ளது

பாடப் பிரிவுகள்[தொகு]

இளங்கலைப் பாடப்பிரிவுகள்:

 • M.B.B.S. மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சை
 • B.P.T. பிசியோதெரபி

முதுகலைப் பாடப்பிரிவுகள்:

 • எம்.டி. மயக்க மருந்தியல்
 • எம்.டி. உடற்கூறியல்
 • எம்.டி. உயிரி-வேதியியல்
 • எம்.டி. சமூக மருத்துவம்
 • எம்.டி. தோல்,மேக நோய் மற்றும் லெப்ரசி
 • எம்.டி. பொது மருத்துவம்
 • எம்.டி. நுண்ணுயிரியல்
 • எம்.டி. மகப்பேறியல்
 • எம்.டி. குழந்தை நலவியல்
 • எம்.டி. நோயியல்
 • எம்.டி. மருந்தியல்
 • எம்.டி. உடல் மருத்துவம் & மறுவாழ்வு
 • எம்.டி. உடலியல்
 • எம்.டி. ரேடியோ நோய் கண்டறிதல் / கதிர்வீச்சியல்
 • எம்.டி. அவசர மருத்துவம்
 • எம்.எஸ். உடற்கூறியல்
 • எம்.எஸ். காது, மூக்கு மற்றும் தொண்டை
 • எம்.எஸ். பொது அறுவை சிகிச்சை
 • எம்.எஸ். கண் அறுவை சிகிச்சை
 • எம்.எஸ். எலும்பு மூட்டு அறுவைச் சிகிச்சை
 • எம்.பி.டி. எலும்புமுறிவுகள்
 • எம்.பி.டி. நரம்பியல்
 • எம்.பி.டி. கார்டியோ சுவாசம்
 • எம்.பி.டி. பாடியட்ரிக்ஸ்
 • எம்.பி.டி. விளையாட்டு

பட்டய மேற்படிப்புகள்: மயக்கவியல், குழந்தைகள் நலம், தோல் நோய்கள், கண் சிகிச்சை, எலும்பு முறிவு போன்ற பிரிவுகளில் பட்டயப் படிப்புகள் வழங்குகிறது.

மேற்கோள்கள்[தொகு]

 1. சிதம்பரம் இராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியில் மாணவர்கள் போராட்டம். தினமணி நாளிதழ். 26th Aug 2020. https://www.dinamani.com/tamilnadu/2020/aug/26/raja-muthiah-medical-college-students-protest-3455451.html. 
 2. http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/Rajah-Muthiah-Medical-College-Hospital-comes-under-government-scheme-V-C/article15968514.ece