உள்ளடக்கத்துக்குச் செல்

ரஸ்தோவ் மாநில அரசு மருத்துவப் பல்கலைக்கழகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ரஸ்தோவ் மாநில அரசு மருத்துவப் பல்கலைக்கழகம்
Ростовский Государственный Медицинский Университет
குறிக்கோளுரை«Время учиться быть профессионалом» "தொழில் நெறிஞராவதற்கு இதுவே நேரம்"
வகைஅரசு மருத்துவப் பல்கலைக்கழகம்
உருவாக்கம்1918
தலைமை ஆசிரியர்அலெஸ்யா ஸ்டார்ஜின்ஸ்காயா
கல்வி பணியாளர்
MD-பொது மருத்துவம்
MD-குழந்தை மருத்துவம்
MDS-வாய் நோய் இயல்
ஆயுதப்படை
ஆங்கிலத்துறை
மாணவர்கள்ருசியர்கள், ஏனைய நாட்டினர் (78 நாடுகள்)
அமைவிடம்,

ரஸ்தோவ் மாநில அரசு மருத்துவப் பல்கலைக்கழகம் (Rostov State Medical University; ரஷ்ய மொழி: Ростовский Государственный Медицинский Университет) ஒரு இரசிய அரசுப் பல்கலைக்கழகமாகும். இரசியாவின் ரஸ்தோவ் என்ற நகரில் அமைந்துள்ள இப்பல்கலைகழகம் ரஷ்யாவின் கல்வி மற்றும் மருத்துவ அமைச்சகத்தின் கீழ் இயங்குகிறது.

வரலாறு

[தொகு]

1915 ஆம் ஆண்டு ருஷ்ய-வர்ஷாவ் பல்கலைக்கழகத்தால் ரஸ்தோவ் நா தனு வட்டாரத்தில் மருத்துவப் பயிற்சிப் பள்ளி தோற்றுவிக்கப்பட்டது. 1920 ஆம் ஆண்டு 250 மருத்துவர்கள் இப்பயிற்சிப் பள்ளியில் பட்டம் பெற்றனர். இதன் பின்னர் அவ்வட்டார மருத்துவப் பயிற்சிப் பள்ளி 1930ம் ஆண்டு ரஸ்தோவ் மாநில மருத்துவக் கல்லூரி என பெயர் பெற்றது.

1960ம் ஆண்டு முதல் ருஷ்யர்கள் மற்றுமல்லாது மற்ற நாட்டினரும் (60 க்கும் மேற்பட்ட நாடுகள்) இங்கு மருத்துவம் பயிலுகின்றனர். 1994ம் ஆண்டு முதல் ரஸ்தோவ் மாநில மருத்துவக் கல்லூரியானது ரஸ்தோவ் மாநில மருத்துவப் பல்கலைக்கழகம் என்று அழைக்கப்படுகிறது. ரஸ்தோவ் மாநில மருத்துவப் பல்கலைக்கழகம் தெற்கு ரஷ்யாவின் மிக பெரிய பல்கலைக்கழகமாகவும், மருத்துவமனையாகவும், ஆய்வுக்கூடமாகவும் திகழ்கிறது.