உள்ளடக்கத்துக்குச் செல்

ரமேஷ் சந்திர மஜும்தார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ரமேஷ் சந்திர மஜும்தார் (ஆர். சி. மஜும்தார்) (Ramesh Chandra Majumdar - (R. C. Majumdar) (4 டிசம்பர் 1888 – 11 பிப்ரவரி 1980), புகழ் பெற்ற இந்திய வரலாற்று அறிஞர் ஆவார்.[1][2]

இளமையும் கல்வியும்[தொகு]

1909ல் கல்கத்தா பல்கலைக்கழகத்தில் வரலாறு படிப்பில் இளங்கலை பட்டப்படிப்பும், 1911ல் வரலாறு படிப்பில் முதுகலை பட்டப்படிப்பும் முடித்த ரமேஷ் சந்திர மஜும்தார், 1913ஆம் ஆண்டு முதல் வரலாறு படிப்பில் ஆய்வு மேற்கொண்டார்.

கல்விப் பணியில்[தொகு]

முதலில் ரமேஷ் சந்திர மஜும்தார் டாக்கா அரசு ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் ஆசிரியராக கல்விப் பணி துவக்கினார். 1914முதல் கல்கத்தா பல்கலைக்கழகத்தில் வரலாற்றுத் துறைப் பேரராசிரியாக ஏழு ஆண்டுகள் பணி செய்தார். பண்டைய இந்தியாவில் நிறுவன வாழ்க்கை (Corporate Life in Ancient India) எனும் ஆய்வுப் பணிக்கு முனைவர் பட்டம் பெற்றார்.[3] 1921ல் புதிதாக துவக்கப்பட்ட டாக்கா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக பணி ஏற்கும் வரை, அதன் வரலாற்றுத் துறையின் பேரராசிரியாக பணிபுரிந்தார். 1937 முதல் 1942 முடிய டாக்கா பல்கலைக்கழக்த்தின் துணைவேந்தராக பணியாற்றினார். 1950ல் பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் இந்தியவியல் துறையில் டீன் பதவியில் இருந்தார். இந்திய வரலாறு காங்கிரஸ் அமைப்பின் தலைவராகவும், யுனெஸ்கோவின் மனித வரலாற்று பன்னாட்டு ஆணையத்தின் துணைத்தலைவராகவும் பணியாற்றியவர்.

வகித்த பதவிகளும், இயற்றிய நூல்களும்[தொகு]

ரமேஷ் சந்திர மஜும்தார் பண்டைய இந்திய வரலாற்றில் அதிகமாக அய்வு செய்தவர். தென்கிழக்கு ஆசியா நாடுகளுக்கு ஆய்வு நோக்கில் பயணம் செய்து பல வரலாற்று ஆய்வு நூல்களை எழுதினார். அவைகளில் சில: சம்பா (1927), சுவர்ணத்தீவு (1929) மற்றும் காம்போடியா தேசம் ஆகும்.

பாரதிய வித்தியா பவன் நிறுவனத்தின் தூண்டுதலின் பேரில், 1951ஆம் ஆண்டு முதல் 26 ஆண்டுகள் உழைத்து, வேதகாலம் முதல் நவீன இந்தியா வரையிலான 11 தொகுதிகள் கொண்ட வரலாற்று நூல்களை எழுதியுள்ளார்.

ரமேஷ் சந்திர மஜும்தார், 1955ல் நாக்பூரில் 1955ல் புதிதாக துவக்கப்பட்ட இந்தியவியல் கல்லூரியின் நிறுவன முதல்வராக பதவி வகித்தார். 1958 – 1959களில் ஐக்கிய அமெரிக்காவின் சிகாகோ மற்றும் பென்சில்வேனியா பல்கலைக்கழகங்களில் இந்திய வரலாறு குறித்து உரையாற்றினார்.

ஆசியச் சமூகம் (1966–68), வங்க சாகித்திய பரிசத் (1968–69) முதலிய அமைப்புகளின் தலைவராக இருந்தவர்.

ரமேஷ் சந்திர மஜும்தார் இறுதியாக எழுதிய இந்திய மக்களின் வரலாறும் பண்பாடும் எனும் நூல் 1977ல், தமது 88வது வயதில் வெளியானது.

எழுதிய பிற நூல்கள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Shobhan Saxena (17 October 2010). "Why is our past an area of darkness?". Times Of India இம் மூலத்தில் இருந்து 23 செப்டம்பர் 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120923130828/http://articles.timesofindia.indiatimes.com/2010-10-17/special-report/28235234_1_indian-history-people-history-poets. பார்த்த நாள்: 15 December 2012. 
  2. "Books". Spectrum (The Sunday Tribune). 3 September 2006. http://www.tribuneindia.com/2006/20060903/spectrum/book1.htm. பார்த்த நாள்: 15 December 2012. 
  3. Corporate Life in Ancient India: Thesis. mcmaster.ca. Retrieved 17 November 2013

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ரமேஷ்_சந்திர_மஜும்தார்&oldid=3226518" இலிருந்து மீள்விக்கப்பட்டது