ரமி சாப்ரா
ரமி சாப்ரா (Rami chhabra பிறப்பு --1938) என்பவர் பெண்ணியவாதி, இதழாளர் செயற்பாட்டாளர் ஆவார். 1950 களின் பிற்பகுதியில் இதழிகைத் துறையில் நுழைந்த இவர் தொடர்ந்து எழுத்துப் பணியில் ஈடுபட்டு வருகிறார். டைம்சு ஆப் இந்தியா, இந்தியன் எக்சுபிரசு, இந்துச்தான் டைம்சு போன்ற நாளிதழ்களில் பத்தி எழுத்தாளராகக் கட்டுரைகள் எழுதி வந்தார். வியத்நாம் போர்க் காலத்தில் சைகோனுக்கும் சீனாவுக்கும் சென்று வந்தவர்.
பிறப்பும் படிப்பும்
[தொகு]இப்போதைய பாக்கித்தானில் உள்ள டேரா இசுமாயில் கான் என்னும் ஊரில் பிறந்த ரமி சாப்ரா தில்லிப் பல்கலைக் கழகத்தில் ஆங்கில இலக்கியத்தில் இளங்கலைப் பட்டம் பெற்று பின்னர் சட்டம், குமுகவியல் ஆகியவற்றையும் பயின்றார்.
பெண்ணியவாதி
[தொகு]பெண்களுக்கான பாதுகாப்பு, குடும்பக் கட்டுப்பாடு, வரதட்சினைச் சாவு, பெண்களுக்குச் சொத்துரிமை, பெண்கள் திருமண வயது வரம்பு உயர்த்தல், பெண்களுக்கு எதிரான வன்செயல்கள் ஆகியன பற்றி 1977 ஆம் ஆண்டில் இந்தியன் எக்சுபிரசு தாளில் 'பெமினிஸ்ட் வியூபாய்ன்ட்' என்னும் பகுதியில் வாரம் தோறும் ரமி சாப்ரா எழுதி வந்தார். குக்கிராமங்களுக்குச் சென்று பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளையும் அவல நிலைமைகளையும் நேரிடையாகப் பார்த்துப் புரிந்துகொண்டார். அடிக்கடி உண்டாகும் மகப்பேற்றின் கேடுகள் பற்றியும் பாதுகாப்பான தாய்மைப் பற்றியும் பெண்களிடையே பரப்புரை செய்தார். எச் ஐ வி எயிட்சு போன்ற நோய்களுக்கான எதிர்ப்பு அணியை உருவாக்கினார். தூர்தர்சன் தொடங்கப்பட்ட காலகட்டத்தில் நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்து பணியாற்றினார். ஆல் இந்தியா வானொலியிலும் வினா விடை நிகழ்ச்சி நடத்தினார்.
பதவிகள்
[தொகு]1978 இல் குடும்பக் கட்டுப்பாடு அறக்கட்டளை பொறுப்பை ஏற்றுக் கொண்டார். 1986 இல் அப்போதைய தலைமை அமைச்சர் இராசீவ் காந்தி சுகாதாரம் மற்றும் குடும்பத் துறைக்கு கூடுதல் செயலாளராக ரமி சாப்ராவை அமர்த்தினார். ரமி சாப்ரா தேசிய மக்கள் தொகை குழுவில் உறுப்பினராக இருந்தார்.
எழுதிய நூல்
[தொகு]Breaking Ground—Journey into the Media..And Out
உசாத்துணை
[தொகு]- http://www.thehindu.com/books/books-authors/an-involved-bystander/article4644617.ece
- http://prostitution.procon.org/view.source.php?sourceID=003476 பரணிடப்பட்டது 2015-09-22 at the வந்தவழி இயந்திரம்
- http://www.nbtindia.gov.in/writereaddata/attachment/friday-april-26-20135-25-49-pmrami-a-very-special-correspondent-business-line.PDF