இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.(மே 2019)
மரணத்திற்கு ஓர் ஆண்டுக்கு முன் 1914-ல் எடுக்கப்பட்ட யோன் சிலம்புவேவின் (இடது) இறுதிப் புகைப்படம்
அருட்திரு. யோன் சிலம்புவே (John Chilembwe, 1871 – பெப்ரவரி 3, 1915) ஆபிரிக்க விடுதலைப் போராளியும், பாப்திஸ்து சபை போதகரும் ஆவார். இவரது தலைமையில் ஜனவரி 15, 1915 இல் நயாசலாந்தில் வெள்ளையினக் குடியேற்றவாதிகளுக்கு எதிராக இடம்பெற்ற எதிர்ப்பு போராட்டத்தின் போது மூன்று வெள்ளையர்கள் கொல்லப்பட்டார்கள். இவரது திட்டம் விரிவானதாக இருந்தாலும் வெற்றி பெறவில்லை. இவரும் இவருடன் சென்ற 40 பேரும் கொல்லப்பட்டதுடன் 300 பேர் பிடிபட்டார்கள். குடியேற்றவாத ஆதிக்கத்துக்கு எதிராக நேரடி போராட்டத்தில் முதலில் இறங்கிய ஆபிரிக்க விடுதலைப் போராளிகள் என்பதால் இவருக்கு வரலாற்றில் முக்கிய இடம் இருக்கின்றது. இவரது நினைவாக இன்று மலாவியில்ஜனவரி 15 ஆம் நாள் யோன் சிலம்புவே நாள் என நினைவு கூரப்பட்டு வருகிறது.