உள்ளடக்கத்துக்குச் செல்

யெவ்கேனி யாகோவ்லேவிச் பெரிபியோல்கின்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

யெவ்கேனி யாகோவ்லேவிச் பெரிபியோல்கின் (Yevgeny Yakovlevich Perepyolkin) (உருசியம்: Евге́ний Я́ковлевич Перепёлкин; 19 பிப்ரவரி/ 4 மார்ச்சு1906– 13 ஜனவரி 1940) ஒரு சோவியத் வானியலாளர் ஆவார்.

இவர் 1925 இல் புல்கோவோ வான்காணகத்தில் சேர்ந்து வானியல் பயின்று பட்டம் பெற்றார். பின்னர்1929 இல் புல்கோவோ வான்காணகத்தில் சேர்ந்து பணிபுரிந்தார். 1935 முதல் அந்த வான்காணக வானியல் பிரிவின் பேராசிரியரானார். அப்போது இவர் புறப் பால்வெளி ஒண்முகில் சார்ந்த விண்மீன்களின் சீரிய இயக்க நோக்கீடுகளை வழிநடத்தினார்.

நிலாவின் ஒரு மொத்தல் குழிப்பள்ளமும் செவ்வாயின் ஒரு குழிப்பள்ளமும் இவரது நினைவாகப் பெயர் இடப்பட்டுள்ளன.

மேலும் காண்க

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]