யூசுப் மெகர் அலி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
யூசுப் மெகர் அலி

யூசுப் மெகர் அலி (Yusuf Meher ali) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். 1903 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 23 ஆம் தேதியன்று இவர் பிறந்தார். இந்திய சுதந்திரப் போராட்ட வீரராகவும் ஒரு சோசலிச தலைவராகவும் அறியப்படுகிறார். 1942 ஆம் ஆண்டில் எரவாடா மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தபோது பம்பாய் [1] நகரத் தந்தையாக இவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். [2]

தேசிய இராணுவம், பம்பாய் இளையோர் கூட்டமைப்பு மற்றும் காங்கிரசு சோசலிச கட்சி [3] ஆகியவற்றின் நிறுவனர்களில் இவரும் ஒருவராக இருந்தார். விவசாயிகள் மற்றும் தொழிற்சங்க இயக்கங்களில் பங்கு வகித்தார். சுதந்திரப் போரில் இவர் 'சைமன் கோ பேக்' என்ற வார்த்தையை உருவாக்கினார் [4]

பிரித்தானிய சாம்ராச்யத்திடம் இருந்து சுதந்திரம் பெறுவதற்கான இந்தியாவின் கடைசி நாடு தழுவிய பிரச்சாரத்திற்காக மகாத்மா காந்தியுடன் இணைந்து வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்கேற்று அதன் ஒரு பகுதியாக இருந்தார். இதற்கான இரகசிய இயக்கத்தில் பங்கேற்றார். வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் முன்னணியில் இருந்தார். [5]

படைப்புகளின் பட்டியல்[தொகு]

  1. என்ன படிக்க வேண்டும்: ஒரு படிப்பு பாடத்திட்டம் (1937)
  2. இந்தியாவின் தலைவர்கள் (1942)
  3. பாக்கித்தானுக்கு ஒரு பயணம் (1944)
  4. நவீன உலகம்: ஒரு அரசியல் ஆய்வு பாடத்திட்டம், பகுதி 1 (1945)
  5. தி பிரைசு ஆஃப் லிபர்ட்டி (1948)
  6. நிலத்தடி இயக்கம் (1942)

மேற்கோள்கள்[தொகு]

  1. "Welcome to Municipal Corporation of Greater Mumbai, India".
  2. "Archived copy".
  3. "Archived copy". பார்க்கப்பட்ட நாள் 14 September 2010.
  4. Nauriya. "'Simon Go Back' — 75 years after". The Tribune. https://www.tribuneindia.com/2003/20031031/edit.htm#5. 
  5. Wickenden, T. (1976). Quit India Movement: British Secret Report. Thomson Press (India). பக். 246. https://books.google.com/books?id=O70KAQAAIAAJ. பார்த்த நாள்: 2023-08-22. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=யூசுப்_மெகர்_அலி&oldid=3840048" இலிருந்து மீள்விக்கப்பட்டது