யுவான்போ சாங்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

யுவான்போ சாங் (Yuanbo Zhang) என்பவர் ஒரு பருப்பொருள் தொடர்பு இயற்பியலாலர் ஆவார். பீக்கிங் பல்கலைக்கழகத்தில் யுவான்போ இயற்பியல் பயின்றார். 2000 ஆம் ஆண்டில் இளம் அறிவியல் பட்டத்தையும், 2006 ஆம் ஆண்டில் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் இயற்பியலாலர் பிலிப் கிம் மேற்பார்வையில் ஆய்வு மேற்கொண்டு முனைவர் பட்டத்தையும் பெற்றார். கார்பனின் புறவேற்றுமை வடிவமான கிராபீன் தொடர்பான ஆய்வில் இவர்கள் ஈடுபட்டனர்[1][2]. கிட்டத்தட்ட இதே நேரத்தில் கீம் மற்றும் நோவோசெலோவ் ஆகியோரும் இதே ஆராய்ச்சியில் இவர்களும் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். சாங் பெர்க்லி நகரத்தின் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் அடிப்படை அறிவியல் ஆய்வு உறுப்பினராக 2009 ஆம் ஆண்டு வரை பணியாற்றினார்[3]. 2009 ஆம் ஆண்டு இவர் பியுடான் பல்கலைக்கழகத்தில் ஆசிரியப் பயிற்றுநராக பணியில் சேர்ந்தார்[4]. 2010 ஆம் ஆண்டு இவருக்கு தூய மற்றும் பயன்பாட்டு இயற்பியல் அனைத்துலக ஒன்றியத்தின் இளம் விஞ்ஞானி பரிசு கிடைத்தது.[5].

மேற்கோள்கள்[தொகு]

  1. "Nobel prize committee under fire". Nature. பார்க்கப்பட்ட நாள் 18 November 2010.
  2. "Experimental observation of the quantum Hall effect and Berry's phase in graphene". Nature. 10 November 2005. http://www.nature.com/nature/journal/v438/n7065/full/nature04235.html. 
  3. "miller In the News: 2009". Miller Institute.
  4. "Yuanbo Zhang of Department of Physics, Fudan University". Archived from the original on 2016-03-03.
  5. "C8: Awards | IUPAP: The International Union of Pure and Applied Physics". iupap.org. பார்க்கப்பட்ட நாள் 2016-02-21.
"https://ta.wikipedia.org/w/index.php?title=யுவான்போ_சாங்&oldid=3859760" இலிருந்து மீள்விக்கப்பட்டது