உள்ளடக்கத்துக்குச் செல்

யுனைடெட் ஏர்லைன்சு 4

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
யுனைடெட் ஏர்லைன்சு 4
விபத்து சுருக்கம்
நாள்1935 அக்டோபர், 7
சுருக்கம்விமானியின் பிழை
இடம்சில்வர் கிரவுன் அருகில், வயோமிங்,  ஐக்கிய அமெரிக்கா
பயணிகள்9
ஊழியர்3
காயமுற்றோர்0
உயிரிழப்புகள்12 (அனைவரும்)
தப்பியவர்கள்0
வானூர்தி வகைபோயிங் 247D
இயக்கம்யுனைடெட் ஏர்லைன்ஸ்
வானூர்தி பதிவுNC13317
பறப்பு புறப்பாடுசால்ட் லேக் நகரம் , யூட்டா
சேருமிடம்செயென், வயோமிங்

யுனைடெட் ஏர்லைன்சு 4 (United Airlines Flight 4) எனும் இது, 1935-ம் ஆண்டு அக்டோபர் 7-ம் நாளன்று, போயிங் 247D வகை வானூர்தி ஒன்று, அப்பயண திட்டப்படி ஐக்கிய அமெரிக்காவின் யூட்டா மாகாணத்திலுள்ள சால்ட் லேக் நகரம் என்னுமிடத்திலிருந்து, ஐக்கிய அமெரிக்காவின் மற்றொரு பகுதியான வயோமிங் மாநிலத்தின் தலைநகர் செயென் நகரை நோக்கி புறப்பட்டு இயங்கிக்கொண்டிருந்தது. அதிகாலை சுமார் 02:16 அல்லது 02:17 மணியளவில் செயென் நகர் தரைக் கட்டுப்பாட்டுக்குள் நுழைந்த அவ்வானூர்தி, அடுத்த சில நொடியில் (02:17-ல்) தகவல்தொடர்பு துண்டிக்கப்பட்டது. அந்நேரத்தில், வாநிலையும் ஏறக்குறைய வரம்பற்ற தெளிவாகவே காணப்பட்டுள்ளது. இந்நிலையில், விமானியின் பிழைக் காரணமாக வயோமிங் பிராந்திய கிழக்கு சில்வர் கிரவுன் பகுதியின் மூன்று மைல் (4.8 கிமீ) தொலைவில் நடந்த இவ்வானூர்தி விபத்தில், விமான சேவைப்பணியாளர்கள் மூவரும், பயணிகள் 9 பேர்களும் மொத்தமாக 12 பேர்களும் (பயணித்த அனைவரும்) பலியானார்கள்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. "United Airlines Flight 4". america.pink (ஆங்கிலம்) - 1958. பார்க்கப்பட்ட நாள் 2016-08-28.
"https://ta.wikipedia.org/w/index.php?title=யுனைடெட்_ஏர்லைன்சு_4&oldid=3969957" இலிருந்து மீள்விக்கப்பட்டது