யிலாண்ட்-போசுரென் முகமது கேலிச்சித்திரம் சர்ச்சை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.


யிலாண்ட்-போசுரென் முகமட் கேலிச்சித்திரம் சர்ச்சை (Jyllands-Posten Muhammad cartoons controversy) டானிசுப் பத்திரிகையான யிலாண்ட்-போசுரென் (Jyllands-Posten) 2005, செப்டம்பர் 30 இல் இசுலாமிய இறைதூதர் முகமது நபியை சித்தரித்து வெளியிட்ட 12 கேலிச் சித்திரங்களின் பின் தொடங்கியது.[1] இக்கேலிச்சித்திரங்களை இசுலாமை விமர்சனத்துக்கு உட்படுத்துவதற்கான உரையாடலுக்கும், தன் தணிக்கை (self-censorship) தொடர்பான உரையாடலுக்கும் உதவும் வகையில் வெளியிட்டதாக அப்பத்திரிகை கூறியது.

குர்ஆன் உருவ வழிபாட்டை கண்டிக்கிறது. படங்கள் உருவ வழிபாட்டுடன் தொடர்புடையதால், அவையும் அனுமதிக்கப்படுவதில்லை. குறிப்பாக முகமது நபியின் தோற்றத்தை சித்தரிப்பது இசுலாமிய சமயத்தில் ஏற்புடையது இல்லை. முகமது நபியை சித்தரித்து கேலிச்சித்திரங்களை வரைந்ததால் யிலாண்ட்-போசுரென் இது தொடர்பான இசுலாமிய நெறியை மீறியதாகக் இசுலாமியர்களால் கருதப்படுகிறது. இது இசுலாமியர்களைப் பாதிக்கும் எனத் தெரிந்தும் கருத்து வெளிப்பாட்டு சுதந்திர நோக்கிலும், மேற்குநாட்டு விழுமியங்கள் நோக்கிலும் இவற்றை வெளியிடுவது நியாயப்படுத்தப்பட்டது. இதனை கண்டித்து 50 க்கும் மேற்பட்ட நாடுகளில் எதிர்ப்புப் போராட்டங்கள் நடத்தப்பட்டன.

மேற்சான்றுகள்[தொகு]

  1. Henkel, Heiko (Fall 2010). "Fundamentally Danish? The Muhammad Cartoon Crisis as Transitional Drama". Human Architecture: Journal of the Sociology of Self-knowledge. 2 VIII. http://www.okcir.com/Articles%20VIII%202/Henkel-FM.pdf. பார்த்த நாள்: 25 November 2012. 

வெளி இணைப்புகள்[தொகு]