யாழ்ப்பாண உயர் தொழில்நுட்ப நிறுவனம்
Appearance
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
இலங்கை உயர் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தின் 11 உயர் தொழில்நுட்ப நிறுவனங்களில் முக்கியமான ஒரு நிறுவனமாக யாழ்ப்பாண உயர் தொழில்நுட்ப நிறுவனம் (எ.ரி.ஐ) விளங்குகின்றது. 1996 ஆம் ஆண்டு வடமாகாண மக்களுக்கென யாழ்குடாநாட்டில் ஆரம்பிக்கப்பட்டது. இந்நிறுவனம் தற்போது 665/2, கடற்கரை வீதி, குருநகர், யாழ்ப்பாணம் என்ற முகவரியுள்ள இடத்தில் தொழிற்படுகின்றது. இந்த நிறுவனத்தில் 7 கற்கை நெறிகள் முழு நேர மற்றும் பகுதிநேர மாணவர்களுக்கு என்று இருக்கின்றது. அவை வருமாறு,
- உயர் தேசிய கணக்கியல் பட்டயப் படிப்பு(எச்.என். டி. எ.)
- உயர் தேசிய ஆங்கில பட்டயப் படிப்பு(எச்.என். டி. ஈ .)
- உயர் தேசிய தகவல் தொழில்நுட்ப பட்டயப் படிப்பு(எச்.என். டி. ஐ .ரி )
- உயர் தேசிய முகாமைத்துவ பட்டயப் படிப்பு(எச்.என். டி. எம் )
- உயர் தேசிய சுற்றுலாத்துறை மற்றும் விருந்தோம்பல் பட்டயப் படிப்பு(எச்.என். டி. எச். எம்.)
- உயர் தேசிய கட்டிடப் பொறியியல் பட்டயப் படிப்பு(எச்.என். டி. சி.ஈ)
- உயர் தேசிய மின்சாரப் பொறியியல் பட்டயப் படிப்பு(எச்.என். டி. ஈ .ஈ )
உசாத்துணைகள்
[தொகு]யாழ்ப்பாண உயர் தொழில்நுட்ப நிறுவனம் பரணிடப்பட்டது 2016-08-20 at the வந்தவழி இயந்திரம்