மோட்டூரு அனுமந்த இராவு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மோட்டூரு அனுமந்த இராவு
Moturu Hanumantha Rao
மாநிலங்களவை
பதவியில்
3 ஏப்ரல் 1988 முதல்o 2 ஏப்ரல் 1994
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு1917
வெள்ளத்தூர், குண்டூர் மாவட்டம்
இறப்பு18 சூன் 2001
ஐதராபாத்து, இந்தியா
அரசியல் கட்சிஇந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்)

மோட்டூரு அனுமந்த இராவு (Moturu Hanumantha Rao) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். 1917 ஆம் ஆண்டு முதல் 2001 ஆம் ஆண்டு வரையிலான காலத்தில் இவர் வாழ்ந்தார். தென்னிந்தியாவின் ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் ஒரு பொதுவுடைமைக் கட்சித் தலைவராக இருந்தார்.

விசயவாடாவில் இருந்து வெளிவந்த பொதுவுடைமை இயக்கப் பத்திரிகையான பிரச்சாசக்தியின் நிறுவனர்-ஆசிரியர் என்று அறியப்படுகிறார்.[1][2] 1981 ஆம் ஆண்டு ஆகத்து மாதம் 1 ஆம் தேதியன்று இ.எம்.எசு நம்பூதிரிபாட்டு அவர்களால் முதல் இதழ் வெளியிட்டபோது, பி.சுந்தரய்யா தலைமையிலும், மோட்டூரு அனுமந்த இராவு ஆசிரியரின் தலைமையிலும் பிரச்சாசக்தி நாளிதழாக வெளிவந்தது.[3]

(i) மெட்ராசு சட்டமன்றம் மற்றும் ஆந்திரப் பிரதேச சட்டமன்றம், 1952-55,

(ii) ஆந்திரப் பிரதேச சட்ட மேலவை, 1978-84 மற்றும்

(iii) மாநிலங்களவை 3-4-1988 முதல் 2-4-1994 வரை; தலைவர், தொழில்துறை தொடர்பான நாடாளுமன்ற நிலைக்குழு, மாநிலங்களவை , 1993-94; செயலாளர், சிபிஐ (எம்), 1964-82 ஆந்திரப் பிரதேச மாநிலக் குழு; சில நூல்களின் ஆசிரியர்.[4]

மோட்டூரு அனுமந்த இராவு 2001 ஆம் ஆண்டில் இறந்தார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. Prajasakti: http://www.prajasakti.com/
  2. "Archive News". தி இந்து. 2007-06-19. Archived from the original on 2010-01-13. பார்க்கப்பட்ட நாள் 2016-12-01.
  3. "Prajasakti Daily Celebrates Silver Jubilee". Pd.cpim.org. Archived from the original on 10 April 2009. பார்க்கப்பட்ட நாள் 2016-12-01.
  4. "Rajyasabha Members Biological Sketches 1952-2003" (PDF).
"https://ta.wikipedia.org/w/index.php?title=மோட்டூரு_அனுமந்த_இராவு&oldid=3793308" இலிருந்து மீள்விக்கப்பட்டது