மோகன் காந்தா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மோகன் காந்தா
பிறப்பு4 செப்டம்பர் 1945 (1945-09-04) (அகவை 78)
சென்னை
பணிஇந்திய ஆட்சிப் பணி அதிகாரி

மோகன் காந்தா (Mohan Kanda) (பிறப்பு 4 செப்டம்பர் 1945) ஓர் இந்திய அரசு ஊழியராவார். 1968 இல் இந்திய ஆட்சிப் பணியில் சேர்ந்த இவர்[1] 2005ஆம் ஆண்டு ஆந்திரப் பிரதேசத்தின் தலைமைச் செயலாளராக இருந்து ஓய்வு பெற்றார். மேலும், தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் உறுப்பினராகவும் பணியாற்றினார். [2]

ஆரம்ப கால வாழ்க்கை[தொகு]

இவர், இந்தியாவின் , சென்னையில் , ஒரு தெலுங்கு பிராமண குடும்பத்தில், உயர் நீதிமன்ற நீதிபதி திரு. பீமா சங்கரம் காந்தா மற்றும் ஒரு முக்கிய சமூக சீர்திருத்தவாதியான திருமதி. பாப்பையம்மா ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார். ஐதராபாத்தில் உள்ள ஆல் செயிண்ட்ஸ் உயர்நிலைப் பள்ளியில் பள்ளிப் படிப்பையும், உசுமானியா பல்கலைக்கழகத்தின் நிசாம் கல்லூரியில் கணிதத்தில் இளங்கலை மற்றும் முதுகலை பட்டத்தையும் பெற்றார். இவரது ஆய்வறிக்கைக்காக உசுமானியா பல்கலைக்கழகத்தால் கணிதத்தில் முனைவர் பட்டம் வழங்கப்பட்டது. இவரது மருமகன் சீதாராம் யெச்சூரி இந்தியப் பொதுவுடமைக் கட்சி யின் (மார்க்சிஸ்ட்) ஆட்சிக் குழு உறுப்பினராக உள்ளார்.

இவர் ஒரு சில தெலுங்குத் திரைப்படங்களில் குழந்தை நடிகராக "மாஸ்டர் மோகன்" என்ற திரைப்பெயருடன் நடித்துள்ளார். [3] எல்வி பிரசாத் இயக்கிய 1952 ஆம் ஆண்டின் நகைச்சுவைத் திரைப்படமான பெல்லி சேசி சூடு இதில் அடங்கும். அம்மா நோப்புலே அம்மாம்மா நோப்புலே என்ற படத்திலும் நடித்தார்.

தொழில்[தொகு]

மோகன் காந்தா, பாரத ஸ்டேட் வங்கியில் அதிகாரியாக தனது வாழ்க்கையைத் தொடங்கினார். இந்திய ஆட்சிப் பணி அதிகாரியான பிறகு ஆந்திரப் பிரதேச அரசுடன் இணைந்து பணியாற்றத் தொடங்கினார். இவர் இந்திய அரசின் வேளாண் அமைச்சகத்தின் செயலாளராகவும், தேசிய பேரிடர் மேலாண்மை முகமையின் துணைத் தலைவராகவும் பணியாற்றினார். [4] நா. சந்திரபாபு நாயுடுவின் அரசிலும் பின்னர் எ. சா. ராஜசேகர் ரெட்டியில் அரசிலும் தலைமைச் செயலாளராகப் பணிபுரிவதற்கு முன்பு மத்திய வேளாண் அமைச்சகத்தில் செயலாளராகப் பணியாற்றினார்.

12வது ஐந்தாண்டுத் திட்டத்தை (2012-17) திட்டக்குழு உருவாக்குவதற்கான விவசாயம் மற்றும் அதனுடன் தொடர்புடைய துறைகளுக்கான வழிகாட்டுதல் குழுவில் இவர் உறுப்பினராக இருந்தார். [5] [6]

பயிர்களுக்கு விடுமுறை அறிவிப்பதில் கடலோர ஆந்திராவில் கலவரம் நடந்தால் அதை எதிர்கொள்ளும் பிரச்சனைகளை ஆராயும் குழுவின் தலைவராக இவர் நியமிக்கப்பட்டார். [7]

சொந்த வாழ்க்கை[தொகு]

மோகன் காந்தா, உஷா என்பவரை மணந்தார். உஷா, வேளாண்மை விரிவாக்க மேலாண்மைக்கான தேசிய மையத்தின் இயக்குநராக பணியாற்றினார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "The Hindu : Mohan Kanda to take charge today". Archived from the original on 15 April 2003.{{cite web}}: CS1 maint: unfit URL (link)
  2. "NDMA :: Members". Archived from the original on 2009-07-28.
  3. "Mohan". IMDb.
  4. Press Release from Government of Andhra Pradesh
  5. "Archive News". தி இந்து. 2011-06-09. Archived from the original on 2011-06-13.
  6. "Panel set up to study ryots issues". IBNLive. Archived from the original on 2012-10-17.
  7. IBNLive. "CNN-IBN News: Breaking News India, Latest News, Current Headlines World - IBNLive".

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மோகன்_காந்தா&oldid=3858896" இலிருந்து மீள்விக்கப்பட்டது