மொரட்டாண்டி பிரத்தியங்கரா தேவி கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பிரத்தியங்கரா தேவி கோயில் என்பது புதுச்சேரி மாநிலத்தில் மொரட்டாண்டி ஊரில் அமைந்துள்ள அம்மன் கோவிலாகும். [1] எழுபத்தி இரண்டு அடி உயரமான பிரத்தியங்கிரா தேவி சுதை சிற்பம் இக்கோவிலில் உள்ளது.


சந்நிதிகள்[தொகு]

  • அஷ்டதிக் பாலகர்களான இந்திரன், அக்னி, எமன், நிருதி, வருணன், வாயு, குபேரன், ஈசானன்,
  • உக்ர நரசிம்மர்,
  • காலபைரவர்
  • சக்கரத்தாழ்வார்
  • சண்டிகேஸ்வரர்,
  • தட்சிணாமூர்த்தி,
  • தன்வந்திரி,
  • துர்க்கை,
  • பாதாள பிரத்யங்கிரா தேவி,
  • பிரளய விநாயகர்,
  • பிராம்ஹி, மகேஸ்வரி, வைஷ்ணவி, வாராஹி, இந்திராணி, சாமுண்டி
  • மகாலட்சுமி,
  • வாஸ்து பகவான்,
  • ஹயக்கிரீவர்

மொரட்டாண்டி சித்தா்[தொகு]

மொரட்டாண்டி சித்தா் என்று அழைக்கப்பட்ட தொல்லைக்காது சாமிகள் இக்கோயிலில் வாழ்ந்துள்ளார். [1]

வழிபாட்டு முறை[தொகு]

பிரத்தியங்கரா தேவி கோயிலில் தேய்பிறை அஷ்டமி தினத்தில்,நடுநிசி வேளையில் பிரத்தியங்கரா தேவிக்கு யாகங்கள் நடைபெற்று வருகிறது.

நேர்த்திக்கடன்[தொகு]

  • சர்க்கரைப்பொங்கல், எள்ளு சாதம், புளியோதரை, தயிர்சாதம், எள்ளுருண்டை பாயசம், கிழங்குவகைகள், உளுந்தவடை வெண்ணெய், திராட்சை ரசம் ஆகிய உணவு வகைகள் நைவேத்தியமாக படைக்கப்படுகின்றன.
  • நீல நிற ஆடைகள், நீலம் சிகப்பு நிற பூக்கள், எளுப்பூ, செந்தாமரை ஆகியவையும் படைக்கப்படுகின்றன.
  • ஜாதிக்காய் மாலை, வாழை நாரில் கட்டப்பட்ட வாழைப்பூ மாலை ஆகியவை பிரத்யங்கிரா தேவிக்கு மட்டும் சமர்பிக்கப்படுகின்றன.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "Prithiyangara Devi Temple : Prithiyangara Devi Prithiyangara Devi Temple Details | Prithiyangara Devi - Moratandi | Tamilnadu Temple | பிரத்யங்கிராதேவி". temple.dinamalar.com.

வெளி இணைப்புகள்[தொகு]