உள்ளடக்கத்துக்குச் செல்

மைக், தலையில்லாத கோழி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மைக்
மைக், தலையில்லாத கோழி
ஏனைய பெயர்(கள்)மைக், தலையில்லாத கோழி, அதிசய மைக்
இனம்Gallus gallus domesticus
வகைWyandotte
பால்ஆண்
பிறப்புஏப்ரல் 1945
இறப்புமார்ச்சு 1947
போனிக்ஸ், அரிசோனா, ஐக்கிய அமெரிக்கா,
உரிமையாளர்லில்யாட் ஒல்சன்

மைக், தலையில்லாத கோழி (ஏப்ரல் 1945 – மார்ச்சு 1947), என்பது அதிசய மைக்,[1] என்று அழைக்கபட்ட ஒரு Wyandotte வகை சேவலாகும். இது தலை துண்டிக்கப்பட்டபின்னரும் 18 மாதங்கள் உயிர் வாழ்ந்தது. இதன் உரிமையாளர் இந்த அதிசயத்தை நிரூபிக்க உத்தாக் பல்கலைக்கழகத்திற்கு எடுத்துச் சென்றார்.

தலை துண்டிப்பு

[தொகு]

செப்டம்பர் 10, 1945, அன்று லில்யாட் ஒல்சன் என்ற விவசாயியின் வீட்டிற்கு அவரது மாமியார் வந்திருந்தார். இரவு உணவுக்காக அவரது மனைவி அவரை தோட்டத்துக்கு அனுப்பி ஒரு கோழியைப் பிடித்து வரச்சொன்னார். ஒல்சன் 5 1/2 மாத மைக் என்னும் சேவலைப் பிடித்து கோடாரியால் வெட்டினார். வெட்டும்போது சேவல் சட்டென்று தலையை சற்று உள்ளிழுத்துக் கொள்ள, அதன் கொண்டை, அலகு, கண்கள், ஒரு காது என முகத்தின் முன்பகுதி மட்டும் துண்டானது. மூளை லேசாக சேதமுற்றது. ஆனால் மூளைக்கும், இதயத்துக்கும் குருதியைக் கொண்டு செல்லும் நாளங்கள் சேதமடையவில்லை.[2][3]

தலையின் பெரும் பகுதியை வெட்டிய பின்னரும் மைக் தலையில்லாமல் அங்கும் இங்கும் ஓட ஆரம்பித்தது. உணவைத் தேடியது.[2]

மைக் சாகாததால் அதைப் பாராமரிக்க ஒல்சன் முடிவெடுத்தார். அதன் காயத்துக்கு மருத்துவம் பார்த்தார். தண்ணீருடன் பாலையும், சிறு சிறு உணவுப் பொருட்களையும் மை குமிழ் கொண்டு மைக்கின் தொண்டைக்குள் உற்ற ஆரம்பித்தார்.[2] விரைவில் காயம் ஆறியது. பின்னர் சிறு தானியங்களையும் அந்தது துளை வழியாக விழுங்கத் தொடங்கியது.

புகழ்

[தொகு]

மைக்கின் புகழ் நாடெங்கும் பரவியது. அதன் முகப் பகுதியை ஒரு போத்தலில் போட்டு பாதுகாத்தார். பின்னர ஒல்சன் பல இடங்களுக்கு காட்சிக்கு மைக்கை கூட்டிச் சென்றார். புகழ்பெற்ற "டைம்" மற்றும் "லைப்" பத்திரிக்கைகளுக்காக படம்பிடிக்கப்பட்டது.[2]

மைக்கை பார்க்க 25 சென்ட் வசூக்கப்பட்டது. அதன் மூலம் மாதம் 4500 (மே, 2015ல் 47,500)அமெரிக்க டாலர்களை சம்பாதித்தார் ஒல்சன். சேவலின் மதிப்பு 10,000 டாலர்கள் என மதிப்பிடப்பட்டது.[2]

இறப்பு

[தொகு]

மார்ச்சு, 1947ல் ஒல்சன் ஃபீனிக்சில் உள்ள ஒரு நெடுஞ்சாலை உணவகத்தில் தங்கியிருந்தார். நள்ளிரவில் மைக் சளியால் மூச்சுத் திணறத் தொடங்கியது. மைக்கிற்கு உணவு கொடுக்கும் சாதனங்களை அவர் கவணக் குறைவால் காட்சிக்கூடத்தில் மறந்துவிட்டிருந்தார். இதனால் மைக் இறந்தது.

பிரேத பரிசோதனை

[தொகு]

கழுத்து சிரை பாதிப்படையவில்லை என்பது கண்டுபிடிக்கப்பட்டது. மூளையில் இருந்த ஒரு கட்டி இரத்தப்போக்கை தடுத்திருந்தது. பெரும்பகுதி மூளையுடன் இருந்தது. அடிப்படை வேலைகளைச் செய்ய உதவும் மூளைப்பகுதி பாதிப்படையவில்லை.

குறிப்புகள்

[தொகு]
  1. "Mike's Story". Mike the Headless Chicken. 2007. Retrieved 2012-05-28.
  2. 2.0 2.1 2.2 2.3 2.4 Lloyd, John; Mitchinson, John (2006). The Book of General Ignorance. Faber and Faber. ISBN 0-571-23368-6.
  3. "The Rooster". Time Inc. 1945-10-29. Archived from the original on 2009-01-31. Retrieved 2008-11-13.

மேற்கோள்கள்

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=மைக்,_தலையில்லாத_கோழி&oldid=4291158" இலிருந்து மீள்விக்கப்பட்டது