மைக்ரோசாப்ட் வர்ச்சுவல் பிசி
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
![]() | |
உருவாக்குனர் | மைக்ரோசாப்ட்நிறுவனம். |
---|---|
அண்மை வெளியீடு | 2007 SP1 (விண்டோஸ்), 7.0.3 (மாக்) / 15 மே, 2008 (விண்டோஸ்), 14 ஆகஸ்ட், 2007 (Mac) |
இயக்கு முறைமை | மைக்ரோசாப்ட் விண்டோஸ், மாக் ஓஎஸ் எஸ் (deprecated), மாக் ஓஎஸ் (deprecated) |
மென்பொருள் வகைமை | Emulator, Virtual machine |
உரிமம் | Proprietary, ஆயினும் இலவசமாகப் பதிவிறக்கம் செய்து பாவிக்கலாம். |
இணையத்தளம் | for Windows for Mac |
ஒன்றிற்கு மேற்பட்ட இயங்குதளங்களை ஒரே கணினியில் இயக்கிப் பார்பதற்கு மைக்ரோசாப்ட் வர்ச்சுவல் பிசி (இலங்கை வழக்கு: மைக்ரோசாப்ட் வேர்சுவல் பிசி) உதவுகின்றது.
அபிநயிக்கும் வன்பொருட்கள்[தொகு]
- 32பிட் இண்டல் பெண்டியம் II செயலி (எனினும் விண்டோஸ் பணிச்சூழலில் அதில் பொருத்தப்பட்டிருக்கும் செயலியை அபிநயிக்கும்) இதில் இண்டெல் 440பிஸ் மதர்போட்டையும் பிரதிபலிக்கும்.
- 16 மெகாபைட் வரை மாற்றக்கூடிய வீடியோ அட்டை.
- அமெரிக்கன் மெகாரெண்ட்ஸ் பயோஸ்
- கிரியேட்டிவ் சன்பிளாஸ்டர் ஒலி அட்டை.
வர்சுவல் பிசி வன்வட்டானது வர்ச்சுவல் பிசிக்கும் வர்ச்சுவல் பிசி சர்வருக்கும் பொதுவானதாகும்.
ஆதரிக்கும் வழங்கி, விருந்தினர் இயங்குதளங்கள்[தொகு]
வழங்கி இயங்குதளங்கள் வர்ச்சுவல் பிசி 2007 அதிகாரப்பூர்வமாகப் பின்வரும் இயங்குதளங்களை ஆதரிக்கின்றது.
- விண்டோஸ் விஸ்டா (விண்டோஸ் விஸ்டா அல்டிமேட், எண்டபிறைஸ், பிஸ்னஸ் எடிசன், ஐரோப்பாவிற்கான பிஸ்னஸ் எடிசன் என் ஆகியவற்றின் 32 பிட் மற்றும் 64பிட் பதிப்புகளை ஆதரிக்கின்றது)எனினும் விண்டோஸ் விஸ்டா ஸ்டாட்டர் எடிசன், ஐரோப்பிய விஸ்டா ஹோம் என் பதிப்புக்களிற்கு ஆதரவு கிடையாது.
- விண்டோஸ் எக்ஸ்பி புரொபெஷனல்
- விண்டோஸ் சேர்வர் 2003.