மேல் பின் இதழ்விரி உயிர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மேல் பின் இதழ்விரி உயிர்
ɯ
அ.ஒ.அ எண்316
குறியேற்றம்
உள்பொருள் (decimal)ɯ
ஒருங்குறி (hex)U+026F
X-SAMPAM
கிர்சென்பவும்u-
ஒலி

 
பா · · தொ அ.ஒ.அ. உயிரொலி அட்டவணை படிமம் •  ஒலி
முன் முன்-​அண்மை நடு பின்-​அண்மை பின்
மேல்
iy
ɨʉ
ɯu
ɪʏ
ʊ
eø
ɘɵ
ɤo
ɛœ
ɜɞ
ʌɔ
æ
aɶ
ä
ɑɒ
கீழ்-மேல்
மேலிடை
இடை
கீழ்-இடை
மேல்-கீழ்
கீழ்

இணைகளாகத் தரப்பட்டுள்ள உயிர்கள்: இதழ்விரி உயிர் • இதழ்குவி உயிர்.

மேல் பின் இதழ்விரி உயிர் என்பது சில பேச்சு மொழிகளில் பயன்படும் உயிரொலி வகைகளுள் ஒன்று. இதை, உயர் பின் இதழ்விரி உயிர், மூடிய பின் இதழ்விரி உயிர் ஆகிய பெயர்களாலும் அழைப்பது உண்டு. அனைத்துலக ஒலிப்பியல் அரிச்சுவடியில் மூடிய பின் இதழ்விரி உயிர் என்னும் பெயரே பயன்படுகிறது. எனினும் பெருமளவிலான மொழியியலாளர்கள் மூடிய என்ற பயன்பாட்டுக்குப் பதிலாக மேல் அல்லது உயர் என்ற சொற்களையே பயன்படுத்தி வருகின்றனர். இந்த ஒலிக்கான அனைத்துலக ஒலிப்பியல் அரிச்சுவடிக் குறியீடு ɯ என்பது. இது, குறியீட்டளவில் ஆங்கில எழுத்தான m ஐ அரைவட்ட அளவு சுற்றிய நிலை போன்றது. u என்னும் குறியீட்டினால் குறிக்கப்படும் உயிரொலியுடன் தொடர்புள்ள இவ்வொலியைச் சில வேளைகளில் இதழ்விரி u என்பர்.

ஒலிப்பிறப்பு இயல்புகள்[தொகு]

  • நிலைக்குத்துத் திசையில் நாக்கின் நிலை (உயிரொலி உயரம்) மேலண்ணத்தை அண்டி, வாய்க்குள் மேல் நிலையில் இருக்கும். இன்னொரு வகையில் சொல்வதானால், தாடை மேலெழுந்து ஓரளவு மூடிய நிலையில் இருக்கும். இந்நிலை தொண்டைக் குழியில் இருந்து வரும் காற்றுக்கு எவ்வித தடையையும் ஏற்படுத்தாது.
  • கிடைத்திசையில் நாக்கின் நிலை (உயிரொலிப் பின்னியல்பு) வாயின் பின் பகுதியில் அமையும். இந்நிலை தொண்டைக் குழியில் இருந்து வரும் காற்றுக்கு எவ்வித தடையையும் ஏற்படுத்தாது.
  • இதனை ஒலிக்கும்போது உள்ள இதழமைவு நிலை, இதழ்விரி நிலையாகும்.

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மேல்_பின்_இதழ்விரி_உயிர்&oldid=2744934" இலிருந்து மீள்விக்கப்பட்டது