மேற்கு சைபீரியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மேற்கு சைபீரியாவின் வரைபடம்

மேற்கு சைபீரியா (Western Siberia அல்லது West Siberia (உருசியம்: Западная Сибирь, ஒ.பெ Zapadnaya Sibir'; காசாக்கு மொழி: Батыс Сібір) என்ற புவிப்பகுதி, வடக்கு ஆசியாவில் உள்ளது. இது சைபீரியாயாவின் பரந்த பகுதிகளில் அடங்கியுள்ளதாகும். இதன் பெரும்பகுதி, உருசியா நாட்டிலும், தெற்குப் பகுதி கசக்கஸ்தான் நாட்டிலும் உள்ளது. உரல் (Ural) நிலப்பரப்புக்கும், ஏநிசை நதிக்கும் இடையில் இப்பகுதி அமைந்து, சைபீரியாவினை இரு பெரும் பகுதியாகப் பிரிக்கிறது. இதன் பரப்பளவு 2,500,000 சதுர கிலோமீட்டர்கள் (970,000 sq mi) ஆகும். இதன் 80% பகுதியானது, மேற்கு சைபீரியச் சமவெளியில் உள்ளது. இர்டிஷ் ஆறு, ஓப் ஆறு ஆகிய பெரிய ஆறுகள் இங்கு ஓடுகின்றன.[1] இங்கு ஓடும் ஆறுகள் காராக் கடல் வண்டல் நிலங்களை உருவாக்குகின்றன நீரகக்கரிமம் (பாறை எண்ணெய், இயற்கை எரிவளி) போன்ற பொருளாதார பலன்கள் கிடைக்கும் இப்பகுதியே, இரசியாவின் உற்பத்தியில் பெரும் பகுதியாக (2.2 million km2) அமைந்து முக்கிய இடம் பிடிக்கிறது.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Western Siberia". Geographical encyclopedia.
  2. Ulmishek, Gregory F. "West Siberian Oil Basin". PetroNeft Resources Plc. பார்க்கப்பட்ட நாள் 29 January 2022.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மேற்கு_சைபீரியா&oldid=3917116" இலிருந்து மீள்விக்கப்பட்டது