மேரி ஆன் டகாம்ப் ஷார்லீப்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
மேரி ஆன் டகாம்ப் ஷார்லீப்
Mary Scharlieb c1875.jpg
மேரி c. 1875
பிறப்பு18 சூன் 1845
இறப்பு11 நவம்பர் 1930, 21 நவம்பர் 1930 (அகவை 85)
படித்த இடங்கள்
பணிபெண்பாலுறுப்பு மருத்துவர்

மேரி ஆன் டகாம்ப் ஷார்லீப் (Mary Ann Dacomb Scharlieb) இங்கிலாந்தைச் சேர்ந்த முதல் பெண் மருத்துவர் ஆவார்.[1] பிரிட்டனிலும் அதன் காலனி நாடுகள் எதிலும் மருத்துவம் படிக்கப் பெண்கள் அனுமதிக்கப்படாத காலத்தில், முதன்முதலில் 1875-ல் சென்னை மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் பயின்றார். இவருக்கு முன்னர் அமெரிக்காவில் மட்டுமே மருத்துவம் படிக்கப் பெண்கள் அனுமதிக்கப்பட்டனர். ஷார்லீபுக்குப் பிறகு மிசல் ஒயிட், பியேல், மிட்ஷெல் ஆகிய மூன்று ஆங்கிலோ-இந்தியப் பெண்களும் மருத்துவப் படிப்பில் சேர்ந்தனர். சென்னையில் படித்த பிறகு இங்கிலாந்தில் உள்ள ராயல் லண்டன் மருத்துவப் பள்ளியில் படித்து, பிரிட்டன் முதல் பெண் மருத்துவர் என்ற பெருமையை ஷார்லீப் பெற்றார். இவர் சென்னையில் கஸ்தூரிபா காந்தி அரசு மருத்துவ மனையை நிறுவியவர் ஆவார்.[2]

மேற்கோள்[தொகு]

  1. Law, Cheryl (2000). Women, A Modern Political Dictionary. I.B.Tauris. பக். 131–. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-86064-502-0. http://books.google.com/books?id=iTnXdlutlVsC&pg=PA131. 
  2. "பிரிட்டனின் முதல் பெண் மருத்துவர்". ஆதி வள்ளியப்பன். தி. இந்து: pp. 2. ஆகஸ்ட் 23, 2015.