மேரி அக்வர்த் எவர்ழ்செடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
மேரி அக்வர்த் எவர்ழ்செடு
Mary Ackworth Evershed
பிறப்புமேரி அக்வர்த் ஆர்
சனவரி 1, 1867(1867-01-01)
பிளைமவுத் கோயே, தெவோன், இங்கிலாந்து
இறப்பு25 அக்டோபர் 1949(1949-10-25) (அகவை 82)
எவர்சுட்டு, சுரே, இங்கிலாந்து
தேசியம்பிரித்தானியர்
மற்ற பெயர்கள்எம். ஏ. ஆர் (M.A. Orr)
அறியப்படுவதுவானியல், தந்தே புலமை
வாழ்க்கைத்
துணை
ஜான் எவர்ழ்செடு[1]

ஆர் எனப்படும் மேரி அக்வர்த் எவர்ழ்செடு (Mary Ackworth Evershed) (பிறப்பு: 1 ஜனவரி1867 பிளைமவுத் கோயே, தெவோன் – இறப்பு: 25 அல்தோபர் 1949, எவர்சுட்டு, சுரே)ஒரு பிரித்தானிய வானியலாளாளரும் தந்தே இலக்கியப் புலமையாளரும் ஆவார். இவர் தந்தே அலிகீரி எனும் நூலை எம். ஏ. ஆர் எனும் புனைபெயரில் எழுதினார்.

இளமை[தொகு]

மேரி அக்வர்த் ஆர் உலூசி அக்வர்த்துக்கும் ஆந்திரூ ஆருக்கும் 1867 ஜனவரி 1 இல் பிறந்தார்.[2] இவரது தந்தையார் அரசு காலாட்படைக்கல அலுவலர் ஆவார். இவர் சோமர்செட்டில் உள்ள விம்போர்னிலும் சவுத் சுட்டோக்கிலும் வளர்ந்தார்.[2]

இவரது இருபதாம் அகவையில் இவரது தந்தையார் தங்கைகளோடு வெளிநாட்டுக்குப் பயணமாகச் சென்றபோது புளோரன்சில் (1888–1890) தாந்தேவைப் படிக்கத் தொடங்கியுள்ளார். இது இவரை தன் வாழ்நாள் முழுவதும் தாந்தே கவிதைகளில் உள்ள வானியல் மேற்கோள்களில் ஆர்வங் கவியச் செய்துள்ளது.[3]

வானியல் வாழ்க்கை[தொகு]

இவர் 1890 இல் குடும்பத்தோடு ஆத்திரேலியாவுக்குப் புலம்பெயர்ந்தார். அங்கே தெற்கு அரைக்கோள விண்மீன்களுக்கான வழிகாட்டி நூல் இல்லாததால், ஆத்திரேலிய முன்னணி வானியலாளராகிய ஜான் தெப்பத் உதவியுடன் தெற்கு அரைக்கோள விண்மீன்களுக்கான வழிகாட்டி (An Easy Guide to the Southern Stars) எனும் வழிகாட்டி நூலை உருவாக்கினார்.

இவர் 1895 இல் இங்கிலாந்துக்குத் திரும்பிவந்து பிரித்தானிய வானியல் கழகத்தில் உறுப்பினரானார். இக்கழகம் அப்போது அனைவரும் ஆண்களாகவே இருந்த அரசு வானியல்கழகம் சேர்க்காத பெண் வானியல் அறிவாளிகளைச் சேர்த்துகொண்டது. இக்காலதில் தான் இவர் வரலாற்று வானியலில் புலமை வாய்ந்த அகனேசு கிளார்க், ஆன்னி சுகாட்டு மவுந்தர் ஆகியோருடன் தொடர்பு கொண்டார்.[சான்று தேவை]

மேரி 1896 நார்வேயில் முழு சூரிய ஒளிமறைப்பைக் காண சென்றிருந்தபோது பிரித்தானிய வானியலாளர் ஜான் எவர்ழ்செடைச் சந்தித்தார். இவர்கள் இருவரும் 1906 இல் திருமணம் செய்துகொண்டனர். அதுவரை எவர்ழ்செடு தொழிலக வேதியியலாளராகப் பணிபுரிந்து வந்தார். சூரிய இயற்பியலில் தன்னார்வலராக இருந்தார். ஆனால், 1906 இல்ஈந்தியாவில் கோடைக்கானல் வான்காணகத்தில் உதவி வானியலாளராக பதவி கிடைத்தது. மேரியும் ஜானும் போகும் வழியில் அமெரிக்க வான்காணகங்களைப் பார்வையிட்டபடி கோடைகானல் சென்று 1907 இல் ஜான் அப்பதவியில் சேர்ந்தார்.[2][4] ஐந்தியாவில் மேரி வட்டாரத் தாவரங்களைத் திர்ட்டி அவற்றை பிரித்தானிய அருங்காட்சியகத்தில் மூலிகைப் பகுதியில் சேர்த்தார் herbarium.[5]

இவர் தன் வாழ்நாளில் பல சூரிய ஒளிமறைப்புத் தேட்டங்களுக்குச் சென்றுள்ளார். இவற்ரில் 1896 இல் நார்வே, 1900 இல் அல்ஜியர்சு, 1922 இல் மேற்கு ஆத்திரேலியா வல்லால், 1927 இல் யார்க்சயர், 1936 இல் கிரேக்க அயேகியன் கடல் ஆகிய சூரிய ஒளிமறைப்புகள் அடங்கும். இவர் பிரித்தானிய வானியல் கழகத்தின் வரலாற்றுப் பிரிவை 1930 முதல் 1944 வரை வழிநட்த்தினார்.[2]

தந்தே புலமை[தொகு]

இவர் கவிதையில் பேரார்வம் பூண்டிருந்தார். தந்தே கவிதைகள் இவருக்கு மிகவும் பிடிக்கும். ஆனால் அவரது அண்டவியல் குறித்து இவர் கவலைப்படலானர். இவர் 1914 இல் வெளியிட்ட Dante and the Early Astronomers எனும் நூலில் அண்மைய அறிவியலுக்கேற்ப, தந்தே அறிவியலை விளக்க உதவியுள்ளார்.[4]

நூல்தொகை[தொகு]

 • Two Letters Addressed to the Bishop of Ripon, on Secularism, the Holy Scriptures, and the Geographical Position of the Garden of Eden (1876)
 • Easy Guide to Southern Stars (1896)
 • Southern Stars: A Guide to the Constellations Visible in the Southern Hemisphere, preface by John Tebbutt, with a miniature star atlas (London, 1896)
 • Monthly Notices, v.73, p. 422 (1913) - sunspots.
 • Dante and the Early Astronomers (1914)
 • Mem. Kod. Obsc., V.1, Pt.2 (1917) (as Mr. and Mrs. Evershed)
 • Who's Who in the Moon (1938; an index to named lunar craters)

விருதுகள்[தொகு]

 • 1924 – அரசு வானியல் கழக ஆய்வுறுப்பினர்

மேற்கோள்கள்[தொகு]

 1. F. J. M. Stratton (1957). "John Evershed 1864–1956". Biographical Memoirs of Fellows of the Royal Society 3: 40–51. doi:10.1098/rsbm.1957.0004. 
 2. 2.0 2.1 2.2 2.3 A.D. Thackeray (1950). "Obituary Notices: Evershed, Mary Acworth". Monthly Notices of the Royal Astronomical Society 110: 128–129. doi:10.1093/mnras/110.2.128. Bibcode: 1950MNRAS.110..128.. 
 3. Mary Brück (2009). Women in Early British and Irish Astronomy. Springer. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-90-481-2473-2. 
 4. 4.0 4.1 Tracy Daugherty, "Passion for Poetry and Stars Drove 'Dante's Astronomer'" பரணிடப்பட்டது 2018-01-05 at the வந்தவழி இயந்திரம், Oregon State University, Spring 2009.
 5. "Mary Acworth Evershed (1867-1949)", JStor Plant Science; accessed 22 March 2015.

மேலும் படிக்க[தொகு]