மேட்டு சுமித்து (நடிகர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
மேட்டு சுமித்து
Matt Smith by Gage Skidmore 2.jpg
சுமித்து ,2013-ல் நடந்த சான் டிகோ காமிக்-கான்
பிறப்புமேத்யு இராபர்ட்டு
1982-10-28
நார்தாம்டன், நார்தாம்டன்சயர், இங்கிலாந்து, ஐக்கிய இராச்சியம்
கல்விநார்தாம்டன் சுகூல் என்ற சிறுவர்ளுக்கான பள்ளி
படித்த கல்வி நிறுவனங்கள்யுனிவர்சிடி ஆப் ஈசுடு ஆங்க்லியா
பணிநடிகர்
செயற்பாட்டுக்
காலம்
2003–தற்போது

மாத்யு இராபர்ட்டு சுமித்து (பிறப்பு 28 அக்டோபர் 1982) ஒரு ஆங்கில நடிகர் ஆவார். பிபிசி தொடரான தி டாக்டர் கூ வில் 11வது அவதாரம் எடுத்த டாக்டர் கதா பாத்திரத்தில் நடித்து பெயர் பெற்றவர் ஆவார் சுமித்து ஆரம்பத்தில் கால் பந்து கைதேர்ந்த விளையாட்டு வீரராக வேண்டுமென்று ஆசைப்பட்டார். ஆனால் முதுகு தண்டுவட உபாதையினால் விளையாடுத்துறையிலிருந்து வெளியேற்றப்பட்டார்.[1] தி நேசனல் யுத் தியேட்டரில் சேர்ந்து நாடகம் மற்றும் யுனிவர்சிடி ஆப் ஈசுடு ஆங்லியாவில் ஆக்கபூர்வமாக எழுதுதல் படிப்பு படித்த பிறகு, அவர் 2003 ஆம் ஆண்டு இலண்டன் இலுள்ள நாடக அரங்கு களில் மர்டரு இன் தி கதிட்ரலு , பிரெசு கில்ல்சு, தி ஹிசுடரி பாய்சு மற்றும் ஆன் தி சோர் ஆப் தி வைடு வோர்ல்டு முதலிய நாடகங்களில் நடித்தபின் நடிகரானார், பின்பு வெசுடு எண்டு தியேட்டர்சு வரை தனது திறமையை நீட்டித்தார். நாடகத்தழுவலான சுவிம்மிங்க்கு வித்து ஷார்க்கு- வில் கிரிசுடியன் சிலேடர் [2] என்பவருடன் நடித்தார். அதன் பிறகு ஒரு ஆண்டு கழித்து தட்டு ஃபேசு என்ற நாடகத்தில் என்றி என்ற பாத்திரத்தில் மிகத்திறமையாக நடித்து மிகுந்த பாராட்டைப் பெற்றார்.[3]

சுமித்து வின் முதல் பாத்திரம் 2006-ல் பிலிப்பு புல்மான் என்பவரின் பிபிசி தழுவல்களான தி ரூபி இன் தி சுமோக்கு அண்டு தி சேடோ இன் தி நார்த்து சிம் இடைலர் என்பது. தொலைக்காட்சியில் அவரின் முதல் முக்கிய பாத்திரம் 2007-ல் இடேன்னி பார்டி அனிமல்சு என்ற ஒரு பிபிசி தொடராகும். பிபிசி தொடரில் நடித்த எல்லாரையும் விட குறைந்த வயதுடையவர்[4]. 2013- முடிவில் கிறிசுமசு சுபெசலான தி டைம் ஆப் தி டாக்டர் -ல் நடித்த பிறகு அவர் தொடரை விட்டு விலகினார்[5]. அவர் இடெர்மினேடர் செனிசிசு -இல் சுகைநெட்டு உடலோடு வடிவமெடுத்து த் தோன்றினார் (2015)[6][7].2016 முதல் 2017 வரை, அவர் பீடர் மார்கன் என்பவரின் நெட்ப்லிக்சு சுய சரிதை நாடகத்தொடரான தி கிரவுன் பிரின்சு பிலிப்பு , ட்யுக் ஆப் எடின்பரோவாக சித்தரிக்கப்பட்டார்.[8]

இளமை வாழ்க்கை[தொகு]

மேத்யு ராபர்ட்டு சுமித்து 28 அக்டோபர் 1982 [9] நார்தாம்டன், நார்தாம்டன்சயரில் பிறந்தார். அங்கேயே வளர்ந்தார். அவர் இடேவிட் மற்றும் இலைன் சுமித்து [10] என்பவர்களின் மகன் ஆவார். அவருக்கு எரிக் பிரைட்டு என்பவரின் கால் ஆன் மீ (2004) என்ற பாட்டு கொண்ட இசை காணொளியில் பங்கு பெற்ற பல நாட்டிய பெண்களுள் ஒருவரான இலாரா செய்ன் என்ற நாட்டிய வல்லமை பொருந்திய சகோதரி உண்டு.[11]

சுமித்து நார்தாம்டன் சுகூல் என்ற சிறுவர்ளுக்கான பள்ளியில் பயின்றார். அவரது தாத்தா கால் பந்து விளையாட்டில் கை தேர்ந்தவர். அவர் நாட்ட்சு கவுன்டி எப் சி க்காக திறமையாக விளையாடினார். இளம் வீரர்கள் கொண்ட குழுவுக்காக நார்தாம்ப்டன் டவுன் , நாட்டிங்காம் பார்சுடு மற்றும் இலைசெசுடர் சிடி[12], இங்கெல்லாம் விளையாடி பின்னர் இளைஞர் குழுவுக்கு கேப்டன் ஆனார். அதனால் பிறகு சுமித்து கைதேர்ந்த கால் பந்து வீரராவதற்கு திட்டமிட்டார்.[13]

அவருக்கு ஒரு தீவிர முதுகு காயம் ஏற்பட்டது. அதன் விளைவாக சுபாண்டிலொசிசு அதாவது முதுகு தண்டுவட நோய் ஏற்பட்டது, அதனால் அவரால் கால்பந்து வீரராக தொடர முடியவில்லை.[13] அவரது நாடக ஆசிரியர் அவர் சம்மதமின்றி நாடகத்தயாரிப்பில் சேர்த்து நடிப்பில் அறிமுகம் செய்தார்[13]. முதல் இரண்டு தடவை பங்கு பெறத் தவறியபின்[13] , டுவல்வு ஆங்க்ரி மென் என்பதன் தழுவலான டென்த்து ஜுரரு என்ற நாடகத்தில் நடிக்க ஏற்பாடு செய்தார். இந்த நாடகத்தில் பங்கு பெற்றாலும் அவர் ஆசிரியர் ஏற்கனெவே ஏற்பாடு செய்திருந்த நாடக விழாவில் பங்கு பெற மறுத்தார், ஏனெனில் தன்னை ஒரு கால்பந்து வீரராக மட்டும் பார்த்தார். மேலும் நடிப்பதை சமூகம் ஏற்காது என்று நினைத்தார். அவரது நாடக ஆசிரியர் விடா முயற்சியாலும் இலண்டன் இலுள்ள நேசனல் யுத்து தியேட்டரில் சேரும்படி வற்புறுத்தியதாலும் நடிப்பதற்கு சம்மதித்தார்[3] .

பள்ளி படிப்பு முடிந்த பிறகு , யுனிவர்சிடி ஆப் ஈசுடு ஆங்க்லியாவில் நாடகம், ஆக்கபூர்வமாக எழுதுதல் படித்து 2005-ல் பட்டம் பெற்றார்[3][14]. நேசனல் யுத்து தியேட்டரில் அவரது முதல் நாடக பாத்திரங்கள் மர்டர் இன் தி கதீட்ரல் -ல் தாமசு மற்றும் தி மாசுடர் அண்டு மார்கரிடா வில் பசுசூன் ஆகும் . அவரது பிந்தைய பாத்திரம் ஆரம்பப் பணிகளான பிரசு கில்ல்சு மற்றும் ஆன் தி சோர் ஆப் தி வைடரு வேர்ல்டு இவற்றில் அவருக்கு ஒரு முகவரைப் பெற்றுத் தந்தது. அவரது புதிய பாத்திரங்கள் அவர் படித்த பல்கலைக்கழகமுடன் ஒரு ஒப்பந்தம் மூலம் அவர் படிப்பின் இறுதியாண்டில் வகுப்பில் அமராமல் பட்டம் பெறுவதற்கு உதவியது.[13]

[15]

உசாத்துணை[தொகு]

 1. தன் முதுகு காயத்தின் தன்மையை நிகழ்வில் தோன்றும் போது சுமித்து உறுதிப்படுத்தினார் டாப்பு கியர்(2002 தொ கா தொடர்)|டாப்பு கியர்.வார்ப்புரு:Verification needed
 2. "கேளிக்கை: யார் இந்த மேட்டு சுமித்து?". பிபிசி நியூசு. 3 சனவரி 2009. http://news.bbc.co.uk/1/hi/entertainment/7807996.stm. பார்த்த நாள்: 16 மார்ச்சு 2009. 
 3. 3.0 3.1 3.2 ஓக்கார்டு, லிசு (6 மே 2008). "தட்டு ஃபேசு டு வாட்ச்சு". இலண்டன் மாலை சுடான்டர்டு. மூல முகவரியிலிருந்து 23 சனவரி 2009 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 16 மார்ச்சு 2009.
 4. "லாக்டர் கூ – தி எண்டு ஆப் டயம், பகுதி 2". பிபிசி பிரசு ஆபீசு. பார்த்த நாள் 30 ஏப்ரல் 2010.
 5. "மேட்டு சுமித்து டாக்டர் கூ வை விடப்போவதாக அறிவிக்கிறார்". பிபிசி பிலாக்சு (1 சூலை 2013). பார்த்த நாள் 3 ஆகத்து 2013.
 6. அன், ஏங்கீ (3 சூலை 2015). "'டெர்மினேடர்: செனிசிசு': மேட்டு சுமித்து வின் பாத்திரத்துக்கு என்ன?". பிலிம்.
 7. ஓ கானலு, சீன்n (2016). "வில் டெர்மினேடர் செனிசிசு ஈவன் கெட் ய சீக்வல்?". சினிமாப்லென்டு.
 8. சிங், அனிதா (19 ஆகத்து 2015). "£100m நெட்ப்லிக்சு சீரீசு அரச திருமணத்தை மீண்டும் படைக்கிறது". மூல முகவரியிலிருந்து 22 மார்ச்சு 2016 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 13 திசம்பர் 2016.
 9. "மேட்டு சுமித்து – 11வது டாக்டர் கூ – முன்னாள் என் எசு பி தலைமை சிறுவன்". Northampton School for Boys. மூல முகவரியிலிருந்து 14 அக்டோபர் 2013 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 26 மார்ச்சு 2013.
 10. இர்வைன், கிறிசு (6 January 2009). "Late bets on Matt Smith as Doctor Who came from home town". The Daily Telegraph. https://www.telegraph.co.uk/culture/tvandradio/4128049/Late-bets-on-Matt-Smith-as-Doctor-Who-came-from-home-town.html. 
 11. டேவிசு, சான்னி (25 அக்டோப்ர் 2010). "ந்டிகர்: மேட்டு சுமித்து – கோ மென் ஆப் தி இயர் 2010". GQ. Check date values in: |date= (உதவி)
 12. "மீட்டு தி இலவன்த்து டாக்டர்". டாக்டர் கூ மைக்ரோசைட்டு. பிபிசி (5 சனவரி 2009).
 13. 13.0 13.1 13.2 13.3 13.4 "மேட்டு சுமித்து". டெசர்டு ஐலண்டு டிச்க்சு. பிபிசி. பிபிசி ரேடியோ 4.
 14. "டாக்டர் கூ: தி இலவன்த் அவர் பார் யுஇஏ வின் மேட்டு சுமித்து". பிபிசி நியூசு. 6 ஏப்ரல் 2010. http://news.bbc.co.uk/local/norfolk/hi/tv_and_radio/newsid_7929000/7929953.stm. 
 15. "Fresh Face: மேட்டு சுமித்து". London.Broadway.com. 18 அக்டோபர் 2007. Archived from the original on 30 மார்ச்சு 2009. https://web.archive.org/web/20090330051551/http://london.broadway.com/story/id/3008985. பார்த்த நாள்: 3 சனவரி 2009.