மேச்சேரி இன ஆடுகள் ஆய்வு நிலையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மேச்சேரி இன ஆடுகள் ஆராய்ச்சி நிலையம் சேலம் மாவட்டம் மேச்சேரி வட்டத்திலுள்ள பொட்டனேரி எனும் இடத்தில் மேச்சேரி இன ஆடுகளின் ஆராய்ச்சி நிலையம் அமைந்துள்ளது. இந்த ஆராய்ச்சி நிலையம் 05.06.1978 அன்று மேச்சேரி இன ஆடுகளை மேம்படுத்துவதற்காக ஆரம்பிக்கப்பட்டது.[1] தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக கட்டுப்பாட்டின் கீழ் ‘மேச்சேரி’ செம்மறி ஆடு வளர்ப்பு ஆராய்ச்சி மையம் செயல்படுகிறது.

வரலாறு[தொகு]

சேலம் மாவட்டம், கொளத்தூரில் கடந்த 1972-ம் ஆண்டு செம்மறி ஆடு வளர்ப்பு ஆராய்ச்சி மையம் தொடங்கப்பட்டது. 1978-ம் ஆண்டு இம்மையைம் சேலம் மேச்சேரி, பொட்டனேரியில் 1.62 ஏக்கரில் செம்மறி ஆடு வளர்ப்பு ஆராய்ச்சி மையமாக செயல்படத் தொடங்கியது. தற்போது, இங்கு 900 செம்மறி ஆடுகளும், 300 வெள்ளாடுகளும், மகாராட்டிரா மாநிலத்தை சேர்ந்த, ‘நார்மிகாஸ் சொர்ணா’ வகை ஆடுகள் மற்றும் செட்டை இன ஆடுகள் உள்ளன[2][3]

நோக்கங்கள்[தொகு]

மேச்சேரி இன ஆடுகள் ஆராய்ச்சி நிலையத்தின் நோக்கங்கள்

  • திட்டமிட்ட மேலாண்மை மற்றும் இனப்பெருக்கம் மூலம் மேச்சேரி ஆட்டு இனத்தை மேம்படுத்தல்
  • உயர்ரக ஆண் ஆடுகளை விவசாயிகளுக்கு விநியோகித்து மேம்படுத்தல்
  • தலச்சேரி ஆட்டு அலகுககளைப் பராமரித்தல், மாணவர்களுக்கு பயிற்சி அளித்தல், ஆராய்ச்சியை மேம்படுத்துதல்
  • செம்மறி ஆட்டு விவசாயிகளுக்கான விரிவாக்க வள மையமாக செயல்படல்
  • மேம்பட்ட தீவன உற்பத்திக்கான பொருத்தமான தொகுப்பு நடைமுறைகளை பிரபலப்படுத்துதல்

இந்த ஆராய்ச்சி மையத்தின் நோக்கம் ஆகும்.

பிரிவுகள்[தொகு]

  • மேச்சேரி ஆடுகள் அலகு
  • செம்மறி ஆட்டு அலகு
  • வேளாண் மற்றும் மேய்ச்சல் அபிவிருத்தி அலகு
  • சுகாதார பாதுகாப்பு அலகு

மேச்சேரி இன ஆடுகள் பரவல்[தொகு]

தமிழகத்தின் சேலம், ஈரோடு, நாமக்கல், தர்மபுரி மற்றும் கரூர் ஆகிய மாவட்டங்களில் மேச்செரி இன ஆடுகள் பரவலாக காணப்படுகிறது. சேலம் மாவட்டத்தின் மேச்சேரி, கொளத்தூர், நங்கவள்ளி, ஓமலூர் மற்றும் தரமங்கலம் பஞ்சாயத்து ஆகிய இடங்களில் உண்மையான இனங்கள் உள்ளன.[4][5]

மேற்கோள்கள்[தொகு]

  1. https://www.hindutamil.in/news/tamilnadu/194462-.html
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2022-09-24. பார்க்கப்பட்ட நாள் 2022-09-24.
  3. https://tanuvas.ac.in/msrs.php
  4. "மேச்சேரி". தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழகம். பார்க்கப்பட்ட நாள் 13 சனவரி 2017.
  5. https://www.vikatan.com/news/agriculture/why-mecheri-sheeps-are-special-and-how-it-gives-high-income-than-others