மேகன் தோனகுயே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

மேகன் தோனகுயே (Megan Donahue) ஓர் அமெரிக்க வானியலாளர் ஆவார். இவர் பால்வெளிகளியும் பால்வெளிக் கொத்துகளையும் ஆய்வு செய்கிறார். இவர் இயற்பியல், வானியற்பியல் பேராசிரியரக மிச்சிகன் மாநில பல்கலைக்கழகத்தில் பணிபுரிகிறார். இவர் 2017-2018 கால இடைவெளியில் அமெரிக்க வானியல் கழகத்தின் தலைவரும் ஆவார்.[1]

கல்வியும் வாழ்க்கைப்பணியும்[தொகு]

கல்வியும் வாழ்க்கைப்பணியும்[தொகு]

இவர் 1985 இல் மசாசூசட் தொழில்நுட்ப நிறுவனத்தில் இருந்து இயற்பியலில் இளவல் பட்டம் பெற்றார். இவர் 1990 இல் கொலராடோ பவுள்டர் பல்கலைக்கழகத்தில் இருந்து ஜே. மைக்கேல் சல், டி. சுடாக்கே ஆகியவர்களின் மேற்பார்வையில் வானியற்பியலில் தன் முனைவர் பட்டம் பெற்றார் . இவர் கார்னிகி அறிவியல் நிறுவனத்தில் முதுமுனைவர் ஆய்வை முடித்த்தும் 1993 இல் இரண்டாம் முதுமுனைவர் ஆய்வுக்காக விண்வெளித் தொலைநோக்கி அறிவியல் நிறுவனத்தில் சேர்ந்தார். அங்கு பல நிலைகளில் பணியாற்றிவிட்டு 2003 இல் மிச்சிகன் மாநிலப் பல்கலைக்கழகப் புல உறுப்பினராகச் சேர்ந்தார்.[2]

நூல்கள்[தொகு]

இவர் பின்வரும் மூன்று பியர்சன் அண்டக் கண்ணோட்ட்த் தொடர்வரிசை வானியல் பாடநூல்களில் இணையாசிரியராக பங்கேற்றுள்ளார்:

The Cosmic Perspective (8th ed., 2016, இது இருதொகுதிகளாகவும் வெளிவந்துள்ளது),

The Essential Cosmic Perspective (7th ed., 2014),

The Cosmic Perspective Fundamentals (2nd ed., 2015).[3]

தகைமைகளும் விருதுகளும்[தொகு]

இவர் 1993 இல் வானியலில் சிறந்த ஆய்வுரைக்கான இராபர்ட் ஜே. டிரம்பிளர் விருதைப் பெற்றார்.[4] இவர் 2012 இல் அமெரிக்க அறிவியல் மேம்பாட்டுக்கான கழகத்தில் ஆய்வுறுப்பினரானார்; 2016 இல் அமெரிக்க இயற்பியல் கழகத்தின் ஆய்வுறுப்பினரானார்.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "MSU's Megan Donahue elected American Astronomical Society president", MSU Today, Michigan State University, February 21, 2017, retrieved 2017-10-06
  2. 2.0 2.1 Curriculum vitae, retrieved 2017-10-06
  3. Books by Megan Donahue, retrieved 2017-10-06
  4. Past Recipients of the Robert J. Trumpler Award, Astronomical Society of the Pacific, retrieved 2017-10-06

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மேகன்_தோனகுயே&oldid=2894258" இருந்து மீள்விக்கப்பட்டது