மேகன் தோனகுயே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மேகன் தோனகுயே (Megan Donahue) ஓர் அமெரிக்க வானியலாளர் ஆவார். இவர் பால்வெளிகளியும் பால்வெளிக் கொத்துகளையும் ஆய்வு செய்கிறார். இவர் இயற்பியல், வானியற்பியல் பேராசிரியரக மிச்சிகன் மாநில பல்கலைக்கழகத்தில் பணிபுரிகிறார். இவர் 2017-2018 கால இடைவெளியில் அமெரிக்க வானியல் கழகத்தின் தலைவரும் ஆவார்.[1]:{{{3}}}

கல்வியும் வாழ்க்கைப்பணியும்[தொகு]

கல்வியும் வாழ்க்கைப்பணியும்[தொகு]

இவர் 1985 இல் மசாசூசட் தொழில்நுட்ப நிறுவனத்தில் இருந்து இயற்பியலில் இளவல் பட்டம் பெற்றார். இவர் 1990 இல் கொலராடோ பவுள்டர் பல்கலைக்கழகத்தில் இருந்து ஜே. மைக்கேல் சல், டி. சுடாக்கே ஆகியவர்களின் மேற்பார்வையில் வானியற்பியலில் தன் முனைவர் பட்டம் பெற்றார் . இவர் கார்னிகி அறிவியல் நிறுவனத்தில் முதுமுனைவர் ஆய்வை முடித்த்தும் 1993 இல் இரண்டாம் முதுமுனைவர் ஆய்வுக்காக விண்வெளித் தொலைநோக்கி அறிவியல் நிறுவனத்தில் சேர்ந்தார். அங்கு பல நிலைகளில் பணியாற்றிவிட்டு 2003 இல் மிச்சிகன் மாநிலப் பல்கலைக்கழகப் புல உறுப்பினராகச் சேர்ந்தார்.[2]:{{{3}}}

நூல்கள்[தொகு]

இவர் பின்வரும் மூன்று பியர்சன் அண்டக் கண்ணோட்ட்த் தொடர்வரிசை வானியல் பாடநூல்களில் இணையாசிரியராக பங்கேற்றுள்ளார்:

The Cosmic Perspective (8th ed., 2016, இது இருதொகுதிகளாகவும் வெளிவந்துள்ளது),

The Essential Cosmic Perspective (7th ed., 2014),

The Cosmic Perspective Fundamentals (2nd ed., 2015).[3]:{{{3}}}

தகைமைகளும் விருதுகளும்[தொகு]

இவர் 1993 இல் வானியலில் சிறந்த ஆய்வுரைக்கான இராபர்ட் ஜே. டிரம்பிளர் விருதைப் பெற்றார்.[4]:{{{3}}} இவர் 2012 இல் அமெரிக்க அறிவியல் மேம்பாட்டுக்கான கழகத்தில் ஆய்வுறுப்பினரானார்; 2016 இல் அமெரிக்க இயற்பியல் கழகத்தின் ஆய்வுறுப்பினரானார்.[2]:{{{3}}}

மேற்கோள்கள்[தொகு]

  1. "MSU's Megan Donahue elected American Astronomical Society president", MSU Today, Michigan State University, February 21, 2017, பார்க்கப்பட்ட நாள் 2017-10-06
  2. 2.0 2.1 Curriculum vitae, பார்க்கப்பட்ட நாள் 2017-10-06
  3. Books by Megan Donahue, பார்க்கப்பட்ட நாள் 2017-10-06
  4. Past Recipients of the Robert J. Trumpler Award, Astronomical Society of the Pacific, பார்க்கப்பட்ட நாள் 2017-10-06

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மேகன்_தோனகுயே&oldid=2894258" இலிருந்து மீள்விக்கப்பட்டது