மெரொஜெஜி தேசியப் பூங்கா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

மெரொஜெஜி தேசியப் பூங்கா (Marojejy National Park) தென்கிழக்கு மடகாஸ்கரில் உள்ள சவா பகுதிகளில் அமைந்துள்ள ஒரு தேசியப் பூங்கா ஆகும். இதன் மொத்த பரப்பு 55,000 ஹெக்டேர் ஆகும். 1952 ல் இதன் பகுதிகள் இயற்கையைப் பாதுகாக்கும் விதமாக விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செய்வதற்குத் தடை செய்யப்பட்டது. 1998ல் தேசியப் பூங்காவாக மாற்றிய பிறகு பொதுமக்களின் பார்வைக்கு அனுமதிக்கப்பட்டது. மெரொஜெஜி தேசியப் பூங்காவின் பெரும்பாலான பகுதிகள் தென்கிழக்கு மடகாஸ்கரில் உள்ள சம்பவா மற்றும் அண்டபா பகுதிகளுக்கு இடையே அமைந்துள்ளது.